டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை, உலகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது எனவும், டெல்லிக்கு வரும்போது குடியரசு தலைவர் மாளிகைக்கு வரவேண்டும் எனௌம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய குடிமக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததாவது, “அடுத்தமுறை நீங்கள் டெல்லி வரும்போது, ராஷ்டிரபதி பவனுக்கு வருகைபுரிய வேண்டும் என நான் அழைக்கிறேன். உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் ராஷ்டிரபதி பவன் சொந்தமானது”, என பதிவிடப்பட்டிருந்தது.
இப்பதிவை பலரும் விரும்பியுள்ளனர். இக்கட்டுரை வெளியாகும் வரை, 9,000-க்கும் மேற்பட்டோர் அப்பதிவுக்கு விருப்பம் தெரிவித்திருந்தனர். மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் அப்பதிவை பகிர்ந்திருந்தனர்.
தன் குடிமக்களை ராஷ்டிரபதிபவனுக்கு அழைப்பு விடுத்திருப்பதால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை எளிமையானவர் என நெட்டிசன்கள் புகழ்ந்துவரும் அதே வேளையில், பலரும் நகைச்சுவையாகவும் அப்பதிவுக்கு கருத்திட்டு வருகின்றனர்.