தமிழ்நாட்டைச் சேர்ந்த கடின உழைப்பாளி ஒருவரின் எழுச்சியூட்டும் சாதனை கதை இணையத்தில் பலரையும் ஈர்த்து வருகிறது. சிரமங்களைத் தாண்டி ஒரு நாளைக்கு மூன்று வேலைகளை செய்து சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 36 வயதான பரமேஸ்வரி, தனக்கென ஒரு வீடு கட்டவும் ஸ்கூட்டர் வாங்கவும் பணத்தைச் சேமித்து சாதித்துள்ளார். அவர் இதை எல்லாவற்றையும் எந்தவித முறையான கல்வியும் இல்லாமல் செய்துள்ளார்.
ஹ்யூமன்ஸ் ஆஃப் மெட்ராஸ் இன்ஸ்டாகிராமில் பக்கத்தி பகிரப்பட புகைப்படங்களில் பரமேஸ்வரி சிரித்துக்கொண்டே தட்டை கழுவுவதைப் பார்க்க முடிகிறது. இரண்டு குழந்தைகள், கணவர், தாய், விதவை சகோதரி மற்றும் அவருடைய குழந்தை ஆகியோரைப் பராமரிக்கும் பொறுப்புகளை பரமேஸ்வரி எவ்வாறு சுமக்கிறார் என்பதை விரிவாக பதிவிட்டு பகிரப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் பரமேஸ்வரி, தனது திறமையில் நம்பிக்கையுடன் இருக்கிறார். “வாழ்க்கை ஒரு போராட்டமாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைதால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். மகிழ்ச்சியாக இருப்பது ஒரு போராட்டம் அல்ல. ஆனால், அது ஒரு மன செயல்முறை. பெண்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை” என்று அவர் ஹ்யூமன்ஸ் ஆஃப் மெட்ராஸிடம் பரமேஸ்வரி கூறியுள்ளார்.
பரமேஸ்வரி தனது வேலையில்லாத குடிகாரக் கணவரிடமிருந்து குடுபத்திற்காக எந்த நிதி உதவியும் பெறவில்லை. அவருடைய அன்றாட வாழ்க்கை, வெவ்வேறு வேலைகளுக்கு இடையேயான ஓட்டப்பந்தயம் என்றும் அவர் எப்போதாவது ஓய்வெடுப்பார் அல்லது விடுமுறை நாளில் ஓய்வெடுப்பார் என்றும் கூறுகிறார்.
“தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கோயம்பேட்டில் சாலையோரக் கடை வைத்திருக்கும் அம்மாவுக்கு, பொருட்களைக் கொடுப்பேன். பின்னர், நான் ஒரு விட்டுக்கு வேலை செய்ய போவேன். அங்கே நான் எல்லா வீட்டு வேலைகளையும் செய்கிறேன். நேரம் இருந்தால் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு ஒரு நிறுவனத்திற்கு ஓடுகிறேன். அங்கு நான் ஐ.டி ஊழியர்களுக்கு காபி போட உதவுகிறேன். பிறகு, சாலையோர உணவு கடையில் எனது அடுத்த வேலை. இரவு 10 அல்லது 11 மணி வரை தட்டுகளை கழுவுவேன். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, களைப்புடன் வீடு திரும்புகிறேன். 4 மணி நேரம் ஓய்வெடுக்கிறேன்” என்று அந்த பதிவ்ல் பரமேஸ்வரியின் தினசரி வேலைகளைக் கூறுகிறது.
“பலருக்கும் போல, எனக்கு வாரக் கடைசி நாட்களோ, விடுமுறை நாட்களோ, ஞாயிற்றுக்கிழமைகளோ கிடையாது. நான் விடுப்பு எடுக்க வேண்டியிருந்தால், நான் வேலை செய்யும் அனைத்து இடங்களிலும் கோரிக்கை வைக்க வேண்டும். ஒருவர் அனுமதி வழங்க மறுத்தாலும், அது ஒரு நாள் லீவாக ஆகாது” என்று பரமேஸ்வரி கூறுகிறார் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரமேஸ்வரி சொந்த வீடு, வாகனம் என்ற கனவுதான் தன்னை ஓட வைத்தது வைத்தது என்கிறார். வங்கிக் கடன் பெற்ற பிறகு, ஒரு சிறிய வீட்டைக் கட்டியதாகவும், தனக்கென ஒரு ஸ்கூட்டர் வாங்க முடிந்தது என்கிறார். எதுவாக இருந்தாலும், அவர் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று தனக்குத்தானே உறுதி எடுத்துக்கொண்டதாகக் கூறுகிறார்.
“நாம் கவலைப் பட்டாலோ அல்லது நம்மை நாமே வருத்திக்கொண்டாலோ எதுவும் நடக்காது – விளைவுகள் மோசமாகிவிடும். மாறாக, செயல்முறை மெதுவாக உள்ளது என்று நமக்குத் தெரிந்தால், குறைந்தபட்சம் அதை அனுபவிப்போம் – அதுதான் அமைதியாக இருக்க நாம் செய்யக்கூடியது. மகிழ்ச்சியாக இருங்கள். எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இது ஒரு சின்ன தடைதான்” என்று பரமேஸ்வரி கூறியதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரமேஸ்வரியின் மன வலிமையையும் அர்ப்பணிப்பையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “இவர் மிகவும் முக்கியமானவர், துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது அடக்கப்படுகிறார்கள். பரமேஸ்வரியின் மன வலிமையையும் அர்ப்பணிப்பையும் கண்டு நான் வியப்படைகிறேன். முடிந்தவரை இந்த மகத்தான பணி தொடர எனது அன்பும், மரியாதையும் வாழ்த்துக்களும், வணக்கங்களும் அவருக்கு மேலும் மேலும் மேலும் பலத்தைத் தந்து கடவுள் ஆசிர்வதிக்கட்டும். மற்றொரு பயனர், “பரமேஸ்வரி அம்மாவுக்கு வாழ்த்துகள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“