கோமாவில் இருந்தவரை விழிக்க வைத்த கோழிக்கறி!

கிட்டத்தட்ட 62 நாட்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து சிறிதும் பிரக்ஞை இல்லாத வகையில் சுயநினைவின்றி கோமாவில் இருந்தார் அவர்.

By: November 11, 2020, 9:36:23 AM

தைவான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் சாலை விபத்து ஒன்றில் சிக்கினார் சியு என்ற இளைஞர். சாலை விபத்தினால் படுகாயம் அடைந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல், கணையம் போன்ற உள் உறுப்புகள் சேதம் அடைந்ததால் சியுவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

கிட்டத்தட்ட 62 நாட்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து சிறிதும் பிரக்ஞை இல்லாத வகையில் சுயநினைவின்றி கோமாவில் இருந்தார் அவர். இவரிடன் உடல்நிலையை நினைத்து அவரின் குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். எப்போது கண் விழிப்பார் என்று அனைவரும் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்க, அவரை சுற்றி நடக்கும் அனைத்தையும் அவரிடம் கூறிய வண்ணம் இருந்தனர்,

உனக்கு மிகவும் பிடித்த சிக்கன் ஃபில்லெட் சாப்பிட போகின்றேன் என்று அவருடைய அண்ணன் விளையாட்டாக அவரிடம் சொல்ல, சியுவிற்கு இதய துடிப்பு அதிகரித்து சில நிமிடங்களில் சுய நினைவை பெற்றார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல் தைவானில் பேசும் பொருளாகவே மாறியுள்ளது. மறுஜென்மம் எடுத்த சியு, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்தவர்களுக்கு கேக் வழங்கி நன்றி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chicken fillet wakes up a taiwan boy from 62 days of coma

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X