Advertisment

மீன் கூட்டங்களுக்கு உணவளித்த சிம்பன்சி: மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் வைரல் வீடியோ

மனிதனுக்கு மிக நெருங்கிய இனமாக கருதப்படும் சிம்பன்சி தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பேசும் பொருளாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மீன் கூட்டங்களுக்கு உணவளித்த சிம்பன்சி: மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் வைரல் வீடியோ

மனிதனுக்கு மிக நெருங்கிய இனமாக கருதப்படும் சிம்பன்சி தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பேசும் பொருளாகி வருகிறது. இந்த வீடியோ கிளிப்பில், சிம்பன்சி ஒன்று மீன் கூட்டங்களுக்கு உணவளிக்கும் காட்சி அனனைவரையும் வியக்கவைத்துள்ளது.

Advertisment

14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கிளப்பை வனப்பணி அதிகாரி சுசாந்தா நந்தா வெளியிட்டார். " சிம்பன்சிகள் 98% மனிதர்கள். மீன்களுக்கு உணவளிப்பது மிகச்சிறந்த மன நிம்மதியை உருவாக்கும். நீங்களும், இதை முயற்சி செய்யுங்கள்" என்று பதிவிட்டார்.

இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் புதுவித மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில், விடியோவுக்கு சின்னதாக வெட்கப்பட்ட சிம்பன்சி, பின்பு தட்டில் இருந்த உணவை மீன் கூட்டங்களுக்கு போட்டது.

மனிதர்கள் எப்படி உணவர்வை வெளிப்படுத்துவார்களோ? அதே உணர்வை அப்படியே இந்த  சிம்பன்சி வெளிபடுத்திகிறது.

நெட்டிசங்கள் கமண்ட்ஸ்:

 

 

மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்சிகளில் டி.என்.ஏ யை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது. இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment