கொரோனா பாதிப்பு சர்வதேச நாடுகளிடையே பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அமெரிக்காவில் சோளக்காட்டில் ‘Covid Go Away’ என்று வடிவமைத்திருக்கும் போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தின் சகினாவ் கவுன்டி பகுதியில் விவசாயம் செய்து வருபவர் ஜான்சன். இவர் தனது வயலில் சோளம் உள்ளிட்டவைகளை விதைத்து இருந்தார். தற்போது கொரோனா பாதிப்பால் சர்வதேச நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாசமான முறையில், ஜான்சன் முயற்சி செய்தார்.
அந்த எண்ணத்தின் விளைவாக தோன்றிய ஐடியா தான் வயலில் Covid Go Away’ என்ற எழுத்து போன்று சீரமைத்தது. இதற்காக, தனது 13 ஏக்கர் பரப்பிலான வயலில் இந்த முயற்சியை மேற்கொண்டார்.
பருந்து பார்வையில் இந்த முயற்சியை படம்பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்டார். இந்த போட்டோவுக்கு, சமூகவலைதளங்களில் மிகுந்த வரவேற்பு இருந்தது. நெட்டிசன்கள் உள்ளிட்டோர் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil