New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/cow-hit-a-girl-video.jpg)
சென்னையில் சிறுமியை கொடூரமாக மூட்டிய மாடு; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
சென்னையில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுமியை தெருவில் சுற்றிக் கொண்டிருந்த மாடு ஒன்று அந்த சிறுமியை மிகக் கொடூரமாக முட்டி படுகாயப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சிறுமியை கொடூரமாக மூட்டிய மாடு; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
Heartbreaking video: சென்னையில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுமியை தெருவில் சுற்றிக் கொண்டிருந்த மாடு ஒன்று அந்த சிறுமியை மிகக் கொடூரமாக முட்டி படுகாயப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“WARNING: DISTURBING VISUALS”
— மகாலிங்கம் பொன்னுசாமி / Mahalingam Ponnusamy (@mahajournalist) August 10, 2023
சென்னை அரும்பாக்கம் MMDA காலனி, இளங்கோ தெருவில் நடந்த கோர சம்பவம். மாடு முட்டியதில் சிறுமி படுகாயம் : பள்ளி முடிந்து சென்ற போது நேர்ந்த சோகம். சாலையில் செல்லும் மாடுகளை கடக்கும்போது எச்சரிக்கை அவசியம். pic.twitter.com/ejcXhREZEu
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி, இளங்கோ தெருவில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு மாடு திடீரென பாய்ந்து வந்து சிறுமியை கண்மூடித் தனமாகவும் மூர்க்கமாகவும் கொடூரமாகவும் முட்டி குத்தியது. இதைப் பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் மாட்டை விரட்டினாலும் மாடு விடாமல் திரும்பத் திரும்ப அந்த சிறுமியை மிதித்து முட்டியது.
கடைசியாக வேறு சில மாடுகள் வந்த பிறகு, ஒருவர் கம்பெடுத்து மாட்டை அடித்து விரட்டிய பிறகு சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சாலையில் செல்லும் மாடுகளைக் கடந்து செல்லும்போது எச்சரிக்கையாக செல்லுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி, இளங்கோ தெருவில் நடந்த இந்த கோர சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.