Advertisment

”உண்மையான ரசிகனாக இருந்தா என்னை பிடி”.. சேப்பாக்கத்தில் தோனிக்கும் ரசிகருக்கும் நடந்த சேசிங்!

ஒரேவொரு முத்தம் கேட்க, தோனி சிரித்துக் கொண்டே விடைபெற்றுக் கொண்டார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
csk dhoni video

csk dhoni video

csk dhoni video : சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விளையாடும் பயிற்சி ஆட்டத்தில் தோனிக்கும், அவரது ரசிகருக்கும் நடந்த சேசிங் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை சேப்பாக்கத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கிடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.

ரசிகர்கள் இலவசமாக பார்க்க சி,டி மற்றும் இ ஆகிய மூன்று கேலரிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பயிற்சி ஆட்டம் என்பதால் ரசிகர்கள் குறைவாக வருவார்கள் என்று நினைத்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று கேலரிகளும் நிரம்பி வழிந்தன. சும்மாவே தல என்றால் அரங்கத்தில் விசில் பறக்கும். அதிலும் மஞ்சள் நிற ஜெர்சியில் தல எண்ட்ரீ - க்கு ரசிகர்கள் கொடுத்த ஆர்ப்பாட்டம் வானத்தில் இடி முழுக்கம் போல் அதிர்ந்தது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது. ரசிகர் ஒருவர் மைதானத்தில் இருந்த தோனியை நோக்கி ஓடி வந்தார்.

அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, தோனி அருகே நின்றிருந்தார். அவரைச் சுற்றி தோனி ஓட, ரசிகரும் விடாமல் துரத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து வேறு திசையில் ஓட, ரசிகரும் பின் தொடர்ந்து சென்றார் .

இறுதியில் காவலாளிகள் சிலர் ரசிகரைப் பிடித்தனர். அப்போதும் அந்த ரசிகருக்கு தோனி கைகொடுத்தார். ஆனால் அவர் ஒரேவொரு முத்தம் கேட்க, தோனி சிரித்துக் கொண்டே விடைபெற்றுக் கொண்டார் அந்த ரசிகர். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது

Mahendra Singh Dhoni Chennai Super Kings
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment