Viral Video: இந்த உலகத்தை இன்னும் இயக்கிக் கொண்டிருப்பது அன்புதான். அதை நிரூபிக்கும் விதமாக ஒருவீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது துப்பாக்கியால் குறிவைத்த வேட்டைக்காரர் மனதை ஒரு மான் அன்பால் வேட்டையாடிய வீடியோதான்.
சமூக ஊடகங்களின் காலத்தில் தினமும் நூற்றுக் கணக்கான வீடியோக்கள் வைரலாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதில், பெரும்பாலும் வனவிலங்குகள் வீடியோ என்றால் அது மிகையல்ல. வனவிலங்குகளை நெருங்கிப் பார்க்க முடியாது என்பதால், வீடியோக்களிலாவது பார்க்கலாம் என்ற ஆர்வம்தான் பலரையும் வனவிலங்கு வீடியோக்களைப் பார்க்கத் தூண்டுகிறது.
மனிதர்கள் சக மனிதர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருப்பது போல, வனவிலங்குகளிடமும் மனிதர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அப்படி மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. துப்பாக்கியால் குறிவைத்த வேட்டைக்காரர் மனதை ஒரு மான் அன்பால் வேட்டையாடிய நெகிழ்ச்சியான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.எ.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள் வீடியோவில், ஒரு வேட்டைக்காரர் துப்பாக்கியால் மானைக் குறிவைக்கிறார். அதை பார்த்த அந்த மான் அங்கே இருந்து தப்பி ஓடாமல், அவரை நோக்கி வந்து அன்பை வெளிப்படுத்துகிறது. அந்த வேட்டைக்காரர் மானின் அன்பில் மனம் மாறுகிறார். இந்த வீடியோ பார்வையாளர்களை நெகிழச் செய்துள்ளது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “வேட்டைக்காரரின் வேட்டையாடும் மனநிலை வேட்டையாடப்பட்டது… வேட்டைக்காரர் சுட விரும்பிய மான், திடீரென அவரை அணுகியது. பின்னர், வேட்டையாடுபவர் விரைவாக உணர்ந்தார். விலங்குகளை சுடுவதை விட அதை செல்லமாக வளர்ப்பது மிகவும் திருப்தி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடத் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி வேட்டையாடினால் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனாலும், சிலர் திருட்டுத்தனமாக வேட்டையாடுபவர்கள இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த வீடியொவைப் பார்த்து மனம் திருந்தட்டும். வன விலங்குகள் மீது அன்பு செலுத்தட்டும். உண்மையில் இந்த வீடியோ வனவிலங்குகளின் மீதான அன்பையும் அவைகள் வேட்டையாடப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”