ஃபிட்னஸ் மோடில் தளபதி: ‘ஜிம்’மில் வொர்க் அவுட் செய்யும் மு.க.ஸ்டாலினின் வைரல் வீடியோ

இப்போது, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஜிம்’மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

M.K.Stalin, DMK party,

கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, ‘நமக்கு நாமே’ பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் டி.ஷர்ட்-ஜீன்ஸ், கூலிங் கிளாஸ் என இளைஞராகவே மாறி மக்களை சந்தித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். ’நமக்கு நாமே’ பிரச்சாரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் செம்ம வைரல். இப்போது, மு.க.ஸ்டாலின் ‘ஜிம்’மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், எல்லா வகையான உடற்பயிற்சிகளையும் அசாத்தியமாக செய்யும் வேறுவிதமான மு.க.ஸ்டாலினை கண்டுகொள்வது நிச்சயம்.

உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்வதற்காகவே வீட்டில் தனியாக ‘ஜிம்’ வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அப்படி உடற்பயிற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவை தன்னம்பிக்கை வார்த்தைகளுடன் எடிட் செய்து, திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk working president m k stalin working out in home

Next Story
இந்த ‘செல்ஃபி’க்கு சுமார் 50,000 ‘ரீட்வீட்’… அதுல அப்படி என்ன ஸ்பெஷல்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com