இன்னைக்கும் தோசையா என்று கேட்பவர்களையும் ருசிக்கத்தூண்டும் "பாஸ்தா தோசை"
Saucy pasta dosa : ஓரியோ ஐஸ்கிரீம் நிரப்பப்பட்ட சமோசா மற்றும் சாக்லேட் தோசைகள் போன்றவற்றிற்குப் பிறகு, இந்த வினோதமான தோசை இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தோசை இன்னைக்குமா என்று கேட்பவர்களின் வாயிலும் உமிழ்நீர் ஊறவைக்கிறது பாஸ்தா தோசை,. தமிழகத்தில் உள்ள ஓட்டலில், பாஸ்தா தோசை செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
சுவையான மற்றும் காரமான ரெட் சாஸ் பாஸ்தா என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. அதே போல, தோசை பலரும் விரும்பும் ஒரு உணவாகும். ஆனால், இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்தால்? அந்த உணவு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வது மிகவும் கடினம் ஆகும்.
RDX என்ற டுவிட்டர்வாசி, பகிர்ந்துள்ள இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1 நிமிடத்திற்கும் குறைவான காலஅளவு கொண்ட அந்த வீடியோவில், காரமான ரெட் சாஸ் பாஸ்தா தோசை எவ்வாறு செய்வது என்று காட்டப்பட்டுள்ளது.
தோசை கடாயில் மாவு வார்க்கப்பட்டு தோசை ஊற்றப்படுகிறது. பின் அந்த தோசையில், வெண்ணெய் சேர்த்த பிறகு காய்கறிளும் சிவப்பு சாஸூம், நிறைய கிரீம், மயோனஸ் மற்றும் வேகவைத்த பாஸ்தாவும் தோசையில் நிரப்பப்படுகிது. அதே போல, அந்த தோசையில் அதிக சீஸ் சேர்க்கப்படுகிறது.
Geez.. Pasta.. Ketchup.. Mayo.. To be eaten with rice batter.. Gross. I am not even a Tamilian????????
இந்த வீடியோ, இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ள நிலையில், லைக்குகளை அந்த வீடியோ குவித்து வருகிறது. பலரும் இதுபோன்ற தோசையை இதுவரை சாப்பிட்டதே இல்லை எனவும் பார்ப்பதற்கே சுவையாக இருப்பது போல தோன்றுகிறது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
ஓரியோ ஐஸ்கிரீம் நிரப்பப்பட்ட சமோசா மற்றும் சாக்லேட் தோசைகள் போன்றவற்றிற்குப் பிறகு, இந்த வினோதமான தோசை இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil