scorecardresearch

கோவை: இரவில் வீட்டுக் கதவை உடைத்து நுழைய முயன்ற யானை- வீடியோ

கோவை தடாகம் பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை அங்கிருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

யானை

கோவை தடாகம் பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் பகுதியில் விவசாயி ஒருவர் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை அங்கிருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பன்னிமடை அடுத்த வரப்பாளையம் பிரிவு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை, விவசாயி கணேசன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.

அப்போது, அங்கிருந்த தோட்டத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனங்களை உண்ண முயன்ற நிலையில் முழுமையாக உள்ளே நுழைய முயலாததால் எட்டியவரை வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. இவை அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், காட்டுயானைகள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் நுழையக்கூடும் என்பதால், வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Elephant breaks the door of houses