Advertisment

இனிமேல் ஓணம் என்றால் இந்த ஆண்கள் ஆடிய ஆட்டம் தான் ஞாபகத்திற்கு வரும் போங்க!

இணையத்தில் கேரள ஆண்களின் ஓணம் கொண்டாட்ட வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
facebook viral video

facebook viral video

facebook viral video: ஓணம் அன்று கேரளாவில் ஆண்கள் கூட்டம் ஆடிய டான்ஸ் வீடியோ பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Advertisment

கேரளாவில் கடந்த வாரம் ஓணம் பண்டிகை வழக்கம் போல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மலையாள மக்களின் பாரம்பரிய பண்டிக்கையான ஓணத்திற்கு என்றும் தனிச்சிறப்பு உண்டு. இந்த முறை கேரளாவுக்கு நிகராக தமிழ்நாட்டிலும் ஓணம் பண்டிக்கை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரிகள், அலுவலகங்களில் இளைஞர்கள் மாணவர்கள் கேரள உடை அணிந்து பூக்கோலம் போட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள்.

அதே நேரம் இதுக்குறித்த மீம்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வரிசையில் வந்து நின்றது. தமிழ் பெண்கள் ஏன் ஓணம் கொண்டாடுகிறார்கள்? என ஒரு டீம் மீஸ்களை குவித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது இணையத்தில் கேரள ஆண்களின் ஓணம் கொண்டாட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அவர்கள் அனைவரும் கேரள பெண்களை போல் உடையணிந்து, தலையில் பூ வைத்துய் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். பார்ப்பதற்கு இந்த வீடியோ கலாய்ப்பது போல் இருந்தாலும் இணையத்தில் டாப் வைரல் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது.

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் சிரிக்காமல் இல்லை. இனிமேல் ஓணம் பண்டிக்கை என்றாலே கட்டாயம் அனைவருக்கும் இந்த வீடியோ நினைவில் தோன்றாமல் இருக்காது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment