New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/harbhajan-geeta-750.jpg)
இந்துக்கள் பண்டிகை கொண்டாடியதானால், தன்னை சீக்கிய மதத்திற்கு எதிரானவர் என்று கூறிய ரசிகர்களுக்கு ஹர்பஜன் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக செயல்படக் கூடியவர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். இதனால், ட்விட்டரில் ஹர்பஜன் சிங்கிற்கு 5 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்கள் உள்ளனர். பொதுவாக ஹர்பஜன் சிங்கின் ரசிகர்கள் மற்றும் ஃபாலோவர்களிடம் இருந்து அவருக்கு பாசிடிவான ரியாக்ஷன்களே வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஹர்பஜன் சிங் பதிவிட்ட ஒரு போஸ்ட்க்கு, பலர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். வடமாநிலங்களில் இந்துக்கள் பண்டிகையான கர்வா சாத்(Karva Chauth) என்ற பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கமானது. ஆனால், சீக்கிய மதத்தை சேர்ந்த ஹர்பஜன் சிங், கர்வா சாத் பண்டிகையின் போது அவரது மனைவி எடுத்த போட்டோவை ட்விட்டரில் பகிர்திருந்தார். இந்துக்கள் பண்டிகையை கொண்டாடியதனால், ஹர்பஜன் சிங்கை, சீக்கிய மதத்திற்கு எதிரானர் என ட்விட்டரில் அவரது ஃபாலோவர்கள் விமர்சித்தனர். இதற்கு அமைதியான முறையில் ஹர்பஜன் சிங்கும், கூலாக பதில் அளித்திருந்தார்.
Happy karwa chaouth biwi ❤️❤️❤️????????????@Geeta_Basra now khao ????????????????piyo moaj karo I am sure badi bukh lagi hogi ???????????? pic.twitter.com/6opQbjmDxq
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 8, 2017
இந்த சம்பவம் குறித்து, டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளதாவது: தீபாவளி, ஹோலி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், கர்வா சாத் என எந்த பண்டியை வேண்டுமானாலும் நாங்கள் கொண்டாடுவோம். மதம் என்பதில் வெறியர்கள் போன்று செயல்படும் இதுபோன்றவர்கள், எந்த பண்டிகையை கொண்டாட வேண்டும், எந்த உடையை அணிய வேண்டும் என கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். வாழ்க்கை என்றால் என்பதற்காக அர்த்தத்தை அவர்கள், எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம். அனைத்து மதத்திலும் அன்பு செலுத்துவது குறித்து போதிக்கப்படுகிறது. எனது போற்றோரும், எனக்கு மூத்தவர்களுக்கும் அன்பு, இரக்கம் மற்றும் வேண்டாதவர்களிடம் இருந்த பாதுகாத்து கொள்வது என்பது குறித்து எனக்கு நன்கு கற்றுக் கொடுத்திருக்கின்றனர்.
நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் காலத்தின் போது, எந்தவித சாதி பேதமையும் இல்லாமல் சீக்கியர்கள் முன்னின்று உதவுவதை பார்த்திருப்பீர்கள். என்னைப் பொறுத்தவரையில் இது தான் உண்மையான சீக்கிய மதம். மற்றவர்களை துன்படுத்தாதவாறு, என்னை நானே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது. நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை மற்றவர்கள் எனக்கு சொல்லி புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை. சோஷியல் மீடியாவில் இவ்வாறு என்னைப்பற்றி கூறுபவர்களை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.