உயிர் பிழைக்கப் போராடிய நாய்க்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்திய தீயணைப்பு வீரர்! வைரல் வீடியோ

அமெரிக்காவின் கலிஃபோர்னியாக மாகாணத்தில் உள்ள தென்மேற்கு பேக்கர்ஃபீல்டு பகுதியில் இந்த நெஞ்சத்தை நெகிழச்செய்யும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மனிதாபிமானம் என்பது தற்போதை நிலையில் காண்பதற்கு அரிதாகி வருகிறது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு நாள்தோறும் நாம் படித்து தெரிந்து கொள்ளும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனாலும், நெஞ்சத்தை நெகிழச்செய்யும் சில சம்பங்களும் ஆங்காங்கே நடக்கின்றன. அப்படிப்பட்ட சம்பவம் தான், அமெரிக்காவின் கலிஃபோர்னியாக மாகாணத்தில் உள்ள தென்மேற்கு பேக்கர்ஃபீல்டு பகுதியில் நிகழ்ந்துள்ளது.

தென்மேற்கு பேக்கர்ஃபீல்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த வீட்டில் இருப்பவர்கள் தப்பித்து வெளியே வந்துவிட்டனர். ஆனால், வீட்டில் இருந்தவர்கள் தப்பித்துவிட்ட போதிலும், அவர்கள் வளர்த்த நாய் வீட்டிற்குள்ளேயே மாட்டிக் கொண்டது. உயிர்பிழைக்க உதவி வேண்டி வீட்டிற்குள் காத்திருந்த அந்த நாயை, தீயணைப்பு விரர் ஒருவர் வீட்டினுள் இருந்து மீட்டு வருகிறார். ஆனால், வீட்டிற்குள் நீண்ட நேரம் சிக்கிக்கொண்டதால் அந்த நாய், மீட்டுவந்த போதிலும் உயிர் பிழைக்க போராடுகிறது.

நாய் தானே என்று நினைக்காமல், அந்த நாய்க்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் உயிர் பிழைக்க உதவி செய்தனர் தீயணைப்பு வீரர்கள். இதன்பின்னரே, உயிர்பிழைக்க போராடிய நாய், இயல்பான நிலைக்கு திரும்புகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மனிதாபிமானம் என்ன என்பதை இதைப்பார்த்து கற்றுக் கொள்ளலாமே!

×Close
×Close