பாலிவுட்டில் வெற்றிகரமான தம்பதிகளான ஜெனிலியா - ரிதேஷ் தேஷ்முக் ஜோடியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. அதில், ரிதேஷ் நான் வேறு ஒருத்தியை காதலிக்கிறேன் என்று கூறி ஜெனிலியாவுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
நடிகை ஜெனிலியா பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். இவர் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் பிரபல நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு முதலில் ரியான் என்ற ஆண் குழந்தையும் ஜூன் 2016-இல் ரஹைல் என்று பெயர் வைக்கப்பட்ட இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.
ஜெனிலியா - ரிதேஷ் தேஷ்முக் பாலிவுட்டில் மிகவும் நெருக்கமான வெற்றிகரமான தம்பதிகள் என்பதைக் கூற இவர்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களே சான்று கூறும். பெரும்பாலும் அவர்களுடைய உடற்பயிற்சி செய்யும் ஜிம்தான் அவர்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் எடுக்கிற இடமாக அமைந்துள்ளது.
நடிகை ஜெனிலியா இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி, குடும்ப வாழ்க்கைக்குள் சென்றுவிட்ட பிறகும், சினிமாவில் பேரழகான வெகுளிப்பெண்ணாக நடித்த அவரது இயல்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
அண்மையில் ஜெனிலியா - ரிதேஷ் தம்பதியினர் தங்களுடைய 8வது ஆண்டு திருமண நாளை கோவாவில் சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆனது.
View this post on InstagramWARNING ⚠️ ‘DO NOT’ try this stunt at home ......@geneliad
A post shared by Riteish Deshmukh (@riteishd) on
இந்த நிலையில், ரிதேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜெனிலியாவுடன் பேசும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஜெனிலியா, ரிதேஷிடம் ‘ஐ லவ் யூ சோ மச்’ என்று சொல்கிறார். அதற்கு ரிதேஷ் ‘பட், ஐ லவ் யூ சம் ஒன் எல்ஸ்’ (ஆனால், நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன்) என்று கிண்டலாக கூறி அதிர்ச்சியளிக்கிறார். உடனே ஜெனிலியா, திரும்ப கேட்க ரிதேஷ் ‘ஐ லவ் யூ’ என்று சொல்கிறார். இதனைத் தொடர்ந்து, நவாசுத்தீன் சித்திக் வசனமான “நான் மரணத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறேன்” என்று கூறுகிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதோடு, அந்த வீடியோவைப் பற்றிய குறிப்பில், இந்த சாகத்தை வீட்டில் செய்யாதீர்கள் என்று கூறி எச்சரிக்கை செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.