Advertisment

நீங்கள் அலுவலகத்திற்கு எப்படி செல்கிறீர்கள்? இவர் நதியில் நீந்தி அலுவலகத்திற்கு செல்கிறார்

ஜெர்மனை சேர்ந்த பெஞ்சமின் டேவிட், தன் வீட்டருகே உள்ள நதியில் நீந்தி அலுவலகத்திற்கு செல்கிறார். இதனால், அவர் ஒருவித நிம்மதியை அடைகிறார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீங்கள் அலுவலகத்திற்கு எப்படி செல்கிறீர்கள்? இவர் நதியில் நீந்தி அலுவலகத்திற்கு செல்கிறார்

வேலைக்கு செல்லும்போது நமக்கு மிகவும் எரிச்சலூட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், போக்குவரத்து நெருக்கடிதான். நாமே தாமதமாக அலுவலகத்திற்கு அறக்கப்பறக்க சென்றுகொண்டிருப்போம். இதில், ட்ராஃபிக் ஜாம் ஆகிவிட்டால் அவ்வளவுதான். பேருந்து, பைக், ஆட்டோ, கார், சைக்கிள் எந்த வாகனமாக இருந்தாலும் சரி, போக்குவரத்து நெருக்கடியாகிவிட்டால் நமது பொறுமை எல்லை மீறிவிடும். அதுவும், முன்செல்ல கொஞ்சம் இடைவெளிக்கூட இருக்காது. ஆனால், நமக்கு பின்னால் உள்ள வாகன ஓட்டி “கொஞ்சம் வழிவிட்டால் நான் பறந்துவிடுவேன்” என்பது போல ஹாரன் அடித்துக்கொண்டே இருப்பார்.

Advertisment

போக்குவரத்து நெருக்கடியால் இந்த சிரமங்கள் உள்ளன என்பதால் தான் ஜெர்மனை சேர்ந்த பெஞ்சமின் டேவிட், தன் வீட்டருகே உள்ள நதியில் நீந்தி அலுவலகத்திற்கு செல்கிறார். என்ன ஒரு கடமை உணர்ச்சி! வாட்டர் ப்ரூஃப் கொண்ட பேக்கில் தன்னுடைய ஆடை, ஷூ, லேப்டாப் உள்ளிட்ட தேவையானவற்றை எடுத்துக்கொண்டு காலையில் நீந்த கிளம்பிவிடுவார். முனிச் நகரத்தில் உள்ள 2 கிலோமீட்டர் தூரம் கொண்ட இசார் நதியைக் கடந்து அலுவலகத்திற்கு செல்லுவார்.

நதியில் நீந்துவதற்கு முன்பாக, நதியின் நீரோட்டம், நீர்மட்டம், நீரின் வெப்பநிலை, பருவநிலை ஆகியவற்றை தெரிந்துகொள்வார். பருவநிலைக்கு ஏற்ப உடைகளையும் அணிந்துகொள்கிறார்.

ஆனால், அலுவலகத்திற்கு செல்ல இவற்றையெல்லாம் செய்வதைக் கண்டு பலர் அவரைப்பார்த்து சிரித்திருக்கின்றனர். ஆனால், பெஞ்சமின் டேவிட்டுக்கு தான் செய்வது ரிலாக்ஸிங்காக இருப்பதுபோல் உணர்கிறார்.

“நான் நீந்தும்போது பாலங்களில் நின்றுகொண்டிருக்கும் மக்கள் எப்போதும் என்னை பார்த்து சிரிப்பார்கள்.”, எனக்கூறுகிறார் பெஞ்சமின். ஆனால், யார் என்ன சொன்னாலும், தான் செய்வதில் நிம்மதியை அடைகிறார் பெஞ்சமின்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment