இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்செய்த ஹர்த்திக் பாண்ட்யாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்ட நிலையில், ஹர்த்திக் பாண்ட்யா-எம்.எஸ் டோனி ஆகியோர் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டனர். அப்போட்டியில், அதிரடியாக விளையாடிய ஹர்த்திக் பாண்ட்யா 66 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அமர்களப்படுத்தினார்.
இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதனால், ஹர்த்திக் பாண்ட்யா பாராட்டு மழையில் நனைந்தார். இதனிடையே, ஹர்த்திக் பாண்ட்யாவிற்கு பாலிவுட் நடிகர் அனில் கபூர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டதாவது: சரிவில் இருந்த இந்திய அணி, சிறப்பாக முன்னேறி வெற்றியை அடைந்தது. இதில் ஹர்த்திக் பாண்ட்யா மற்றும் எம்.எஸ் டோனி ஆகியோர் உண்மையான சாம்பியன்ஸ்! என்ன ஒரு அற்புதமான ஆட்டம் என பதிவிட்டிருந்தார்.
Incredible recovery & a smashing win by India! @hardikpandya7 & @msdhoni are true champs! What a great game!! #INDvAUS #bleedingblue
— Anil Kapoor (@AnilKapoor) September 17, 2017
இதற்கு ஹர்த்திக் பாண்ட்யாவும் நன்றி தெரிவித்து ட்வீட்டை தட்டிவிட்டார். அதில், நன்றி சார்... நான் உங்களது மிகப்பெரிய ரசிகர் என்று தெரிவித்திருந்தார்.
Thank you sir! I'm a big big fan of yours ????
— hardik pandya (@hardikpandya7) September 17, 2017
இதைக்கண்ட அனில் கபூர் ரிப்ளே ட்வீட்டில், அந்தபோட்டியில் நீங்கள் வீளையாடிய விதத்தைக் கண்டு ஒட்டுமொத்த நாடும் உங்களது ரசிகர்கள்! இந்திய கிரிக்கெட் அணி மற்றும் உங்களைக் கண்டு பெருமை கொள்கிறேன் என்று பதிலளித்தார்.
@hardikpandya7 After the way you played yesterday, the whole country is your fan! So proud of you & #TeamIndia! https://t.co/Dxh0VhZvV9
— Anil Kapoor (@AnilKapoor) September 18, 2017
இந்த ட்வீட்கள் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையே நடைபெற்ற இந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.