New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/11/cow-urine-dung-eating-doctor.jpg)
சுகப்பிரசவம் நடைபெற பெண்கள் கட்டாயம் இதனை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
Haryana doctor eats cow dung: பசுமாட்டின் சிறுநீர் மற்றும் சாணியில் மனம், உடல் மற்றும் ஆத்மாவை சுத்தம் செய்யும் அனைத்துவிதமான நல் விசயங்களும் இருக்கின்ற என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஹரியானாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சிறுநீர் குடித்து, சாணியை உட்கொண்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கார்னலைச் சேர்ந்த டாக்டர் மனோஜ் மித்தல் என்பவர் கையில் மாட்டுச் சாணத்தினை வைத்த் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். பஞ்சகாவ்யா என்ற விசயத்தை மாடு மனிதர்களுக்கு தரும் என்று கூறி சாணத்தை உட்கொண்டுள்ளார்.
தன்னுடைய தாய் விரதத்தை முடிக்கவும் கூட இப்படியாக சாணம் மற்றும் சிறுநீரை வழக்கமாக உட்கொள்வார் என்றும் கூறியுள்ளார். சுகப்பிரசவம் நடைபெற பெண்கள் கட்டாயம் இதனை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இன்ஸ்டகிராம் மற்றும் ட்விட்டரில் சில கணக்குகளில் மொத்தமாக 7 நிமிட வீடியோக்களும், சில கணக்குகளில் சில வீடியோ துண்டுகளையும் நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.
That guy is an MBBS , MD pediatrics.
— Ryo (@BrownMisanthrop) November 16, 2021
Dude ,,, what is he even thinking at that time ? Yaar , cowdung is also used in various pooja ceremonies in my home.
But eating it 🤣🤷🏾♂️ https://t.co/muswhzzXnT
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.