கிரிக்கெட் போட்டியை சீரியஸாக பார்த்த ரவி சாஸ்திரியின் புகைப்படம்: கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி போட்டியை காணும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

MA Chidambaram stadium,india Vs australia match, ravi shastri, twitter

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணி விளையாடுவதை ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக பார்க்க, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி போட்டியை காணும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், ரவி சாஸ்திரி வெறுப்பாக இருப்பதுபோன்று உள்ளது. அதனால், சமூக வலைத்தளங்கள் இந்த புகைப்படத்தை பெரிதும் விரும்பிய நெட்டிசன்கள், நகைச்சுவையான கருத்துகளையும் அதில் பதிவிட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து திங்கள் கிழமை பெரும்பாலானோர் சோம்பலாகவும், பணிக்கு செல்ல வேண்டும் என்பதால் வெறுப்பாகவும் இருப்பர். அப்படிப்பட்ட வெறுப்புடன் ரவி சாஸ்திரி இருப்பதுபோல் நெட்டிசன்கள் அந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

”திங்கள் கிழமைக்கு முகம் இருந்தால், அது இவ்வாறுதான் இருக்கும்”, என பலரும் அப்புகைப்படத்தில் கேலியாக பதிவிட்டனர்.

மேலும், “அதிகாலையிலேயே உங்களது பெற்றோர் பக்தி சேனலை பார்க்க வைத்தால் உங்கள் முகம் இப்படித்தான் இருக்கும்”, “கல்லூரியில் உங்கள் வருகைப்பதிவு குறைவாக இருந்தால், நீங்கள் ஆசிரியரை இப்படித்தான் சகித்துக் கொள்வீர்கள்”, “சனிக்கிழமை இரவுகளில் சிலரது நிலைமை இப்படித்தான் இருக்கும்”, என பலரும், பல நிகழ்வுகளுடன் இந்த புகைப்படத்தை சம்பந்தப்படுத்தி கருத்திட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: செம்ம கேஷூவல் மொமண்ட்: விமான நிலையத்தில் படுத்திருக்கும் தல தோனியின் வைரல் புகைப்படம்

வீடியோ: கிரிக்கெட்டின் தல தோனியின் ஆட்டத்தால் ஆர்ப்பரித்த சென்னை ரசிகர்கள்

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: If monday had a face this ravi shastri photo from ind aus match has got twitterati rofl ing

Next Story
செம்ம ‘கேஷூவல்’ மொமண்ட்: விமான நிலையத்தில் படுத்திருக்கும் தல தோனியின் வைரலாகும் புகைப்படம்M.S.Dhoni, Virat Kohli,Hardik Pandya, chennai airport
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com