உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே - ஹர்பஜன்

கஜ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ட்விட்டரில் உருக்கம்

கஜ புயல் ஹர்பஜன் ட்வீட் : கஜ புயலால் வாடியுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் சுழன்றடித்த கஜ புயலின் சீற்றத்திற்கு பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரின் வீடுகள், விவசாய நிலங்கள், கால்நடைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இயற்கையின் இந்த கோரத் தாண்டவத்திற்கு டெல்டா பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த துயரத்தில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய நாளில் இருந்தே தமிழர்களை தனது ட்வீட்டால் உர்சாகப்படுத்தி வருகிறார் ஹர்பஜன். தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கும் தமிழில் டுவீட் செய்வதை வழக்கமாகவே கொண்டுள்ளார். இதனாலேயே பலரும் இவரை தமிழ் புலவர் என்றும் பட்டப் பெயர் கொடுத்தனர்.

கஜ புயல் ஹர்பஜன் ட்வீட் :

இதனை தொடர்ந்து கஜ புயலால் உடமைகளை இழந்து வாடும் மக்களுக்காக தாம் உள்ளதாக குறிப்பிட்டு தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம்.முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே” .

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close