ஊழியரின் ஆடையை இரவல் வாங்கிய இம்ரான் கான்! வைரலாகும் வீடியோ!

கோட்டுடன் போஸ் கொடுத்த விரும்பிய இம்ரான் கான், உடனே அங்கிருந்த புகைப்பட கலைஞரின் கோட்டை வாங்கி

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், ஊழியர் ஒருவரின் கோட்டை இரவல் வாங்கி சம்பவம்  சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆடையை இரவல் வாங்கிய இம்ரான் கான் :

பாகிஸ்தானில் கடந்த 25 ஆம் தேதி  நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைப்பெற்றது. இதில் பல்வேறு தடைகளை தாண்டி இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி வெற்றிப் பெற்றது.  இருந்தப் போதும் தனிப்பெரும்பான்மையை  நிரூபிக்க முடியாததால் சிறு சிறு கட்சிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவுடன் இம்ரான்கான் பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கிறார்.

வரும்  18 ஆம் தேதி முறைப்படி இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதிவியேற்கிறார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு  பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 329 பேர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

பதவி பிரமாணம் முடிந்த பின்பு எம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்போது இம்ரான் கான் புகைப்படம் எடுக்க வந்தார்.  அந்த தினம் இம்ரான்கான் கோட் அணியாமல் வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தார்.

புகைப்படத்தில் கோட்டுடன் போஸ் கொடுத்த விரும்பிய இம்ரான் கான், உடனே அங்கிருந்த புகைப்பட கலைஞரின் கோட்டை வாங்கி அணிந்துக் கொண்டு ,  புகைப்படம் எடுத்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், இம்ரான் கானின் செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close