நேற்றைய தினம் ட்விட்டர் சென்ற அனைவருக்கும் தெரிந்திருக்கும் நேற்று ’உலக நடன தினம்’ என்று. ஏன் ட்விட்டர் மட்டும் சொல்கிறோம் என்று யோசிக்காதீர்கள், நேற்று நடனத்தின் மீது அளாதியான பிரியமும், ஈடுப்பாடும் கொண்ட கலைஞர்கள் அவர்களின் நடனத்தை சிறு சிறு வீடியோவாக ட்விட்டர் வலைப்பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.
Advertisment
தமிழ்நாட்டில் பரத நாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் சாக்கியார் கூத்து, கதகளி, மோகினி ஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம், ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி, அஸ்ஸாமில் பிகு, ஜம்மு-காஷ்மீரில் சக்ரி, ரூக்ப், ஆந்திராவில் குச்சுப்பிடி, மணிப்பூரில் மணிப்புரி, பஞ்சாப்பில் பாங்ரா, கிட்டா, பிகாரில் பிதேஷியானு நடனத்தில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கிறது.
ஆனா, இது எல்லாத்தையும் கரச்சி குடிச்சது போல் நம்மூர்ல சில மக்கள் ஆடியிருப்பாங்க பாருங்க ஒரு ஆட்டம். இப்ப வரைக்கும் நெட்டிசன்களுக்கு ஆல் டைம் ஃபவரேட் டான்ஸ் இதுயெல்லாம் தான். சும்மா சொல்லக்கூடாது இந்த வீடியோவாக எத்தனை வருஷம் கழுச்சி பார்த்தாலும் அடிச்சி சொல்றோம் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
1. சாம் ஆண்ட்ரசனின் அல்டி மேட் நடனத்தில்..
2. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அனல் பறக்கும் நடனம்.