இந்த புகைப்படத்தில் உள்ள நாயை கண்டுபிடிக்க முடிகிறதா? இல்லையென்றால் கண்ணாடி அணியுங்கள்

சமூக வலைத்தளங்களில் இப்போது அதுதான் வைரல். இந்த முறை நீங்கள் பாம்பை கண்டுபிடிக்க வேண்டாம். நாயைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

மறுபடியும் ஒருமுறை சமூக இணையத்தளங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. நெட்டிசன்கள் தேட ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் புதரில் உள்ள பாம்பை கண்டுபிடியுங்கள் என ஒரு புகைப்படம் உலா வந்தது. அதேபோல், இப்போதும் ஒரு புகைப்படம் உலா வந்துகொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இப்போது அதுதான் வைரல். இந்த முறை நீங்கள் பாம்பை கண்டுபிடிக்க வேண்டாம். நாயைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அந்த புகைப்படத்தில், ஒரு சமையலறை உள்ளது. அதில், பெரிய குளிர்சாதன பெட்டி, பெரிய குப்பைக் கூடை, பல சமையல் பாத்திரங்கள் உள்ளன. ஆனால், அதில் எந்தவொரு உயிரினமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், எங்கோ அந்த நாய் ஒளிந்துகொண்டிருக்கிறது, ஷெர்லாக் ஹோம்ஸ் போல் தேடித்துருவி பார்த்தாலும் அந்த நாய் கிடைக்கவில்லை. இதைப்பற்றித்தான் நெட்டிசன்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இணையத்தில்.

கிரிஸ்டினா சுவோ என்ற பெண்ணால் முதல்முறை இந்தப் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது இதனை நிறைய பேர் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் புகைப்படத்தை ஏமாற்றுவதற்காக பகிர்ந்துள்ளனர் என தனனித்தானே சமாதானப்படுத்திக் கொண்டு இணையத்தைவிட்டு புறப்பட்டாலும், பெரும்பாலானோர் அந்த நாயை தேடிக் கொண்டுத்தான் இருக்கின்றனர்.

உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என பாருங்கள்.

Can you spot the dog hiding in this kitchen?SPOILER | //yhoo.it/2vEeQnV(Picture: Christina Suvo)

Posted by 7 News Perth on 8 ऑगस्ट 2017

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close