விரலை தத்ரூபமாக வெட்டி ஒட்டும் மாயாஜாலம்! சக்கைபோடு போடும் வீடியோ!!!

இந்த இளைஞர் தனது விரலை வைத்து என்ன செய்கிறார் என்று உங்களால் நிச்சயமாக கண்டுபிடிக்க முடியாது.

மேஜிக் என்றாலே அனைவரும் பிடிக்கும் தான். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாயாஜால வித்தைகள் என்றால் ஒருவித ஆச்சர்யத்துடன் தான் பார்ப்பார்கள். ஒரு மேஜிக் ஷோவை பார்த்து விட்டு, அந்த நிகழ்சியில் அந்த மேஜின் எப்படி செய்தார்கள்? என்று பலமுறை யோசித்தாலும் ஒரு சிறிய ஐடியாவும் அது குறித்து கிடைக்காது.
சீட்டு கட்டுகளை வைத்தும், சில்லரைகளை வைத்தும் மேஜிக் செய்வதை கண்டு ஆச்சர்யத்தில் மூழ்கியிருப்போம் நாம். அதேபோல தான் இந்த இளைஞரும் தனது விரல்களை வைத்து ஒரு மேஜிக் செய்கிறார். கண்களால் பார்ப்பது பொய் என்பார்களே, அது இதுதான் போலும்!
தனது வலதுகையின் விரலை வைத்து இடதுகையின் பெருவிரலை கச்சிதமாக வெட்டி எடுக்கிறார். பின்னர் அதேபோல ஆள்காட்டி விரலையும் வெட்டி எடுக்கிறார். பின்னர் அந்த விரலை பெருவிரலுடன் ஒட்டி மேஜிக் மூலம் அசத்துகிறார். மேஜிக்கில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் இந்த நபர் செய்யும் வித்தைகளை துல்லியமாக பார்த்துவிட்டு, அதை எவ்வாறு செய்கிறார் என்பதை கண்டு பிடிக்க முடிந்தால் கண்டு பிடியுங்கள். இந்த வீடியோவை பார்த்துவிட்டு அவர் செயவதைக்கண்டு நீங்கள் ஆச்சர்யத்தில் மூழ்கப்போவது மட்டும் நிச்சயம்.

கடந்த ஏப்ரல் 30-ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவை  இதுவரை 2,000,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும், சுமார் 30,000 லைக்குகளை இந்த வீடியோ அள்ளியுள்ளது.
×Close
×Close