Advertisment

”குழந்தைகளை பெண்ணியவாதிகளாக வளர்த்தெடுங்கள்”: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதம்

அந்த கட்டுரையில், தனது மகள் அன்பானவளாகவும், ஸ்மார்ட்டாகவும், லட்சியத்துடன் விவாதிப்பவளாகவும், வளர்வது தனக்கு பெருமையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Justin Trudeau, Canada, feminism, feminists, women empowerment patriarchy

உலக பெண் குழந்தைகள் தினம் இரண்டு தினங்களுக்கு முன்புதான் கொண்டாடியிருப்போம். எல்லோரும் அவரவர் ஃபேஸ்புக் நிலைபடத்தை பெண் குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவித்து, விதவிதமான ஃப்ரேமில் மாற்றி வைத்திருப்போம். ஆனால், இந்த இரண்டு நாட்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், புறக்கணிப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. பெண்களுக்கு தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் அளித்து வளர்க்க வேண்டும் என்பது அவசியம். ஆனால், ஆண், பெண் இருபாலின குழந்தைகளை பெண்ணியவாதிகளாக வளர்ப்பது அவசியம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் எழுதிய கட்டுரை, ஆட்சி, குடும்பம் என எல்லாவற்றிலும் அவர் எப்படி பாலின சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

Advertisment

அந்த கட்டுரையில், தனது மகள் அன்பானவளாகவும், ஸ்மார்ட்டாகவும், லட்சியத்துடன் விவாதிப்பவளாகவும், வளர்வது தனக்கு பெருமையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். "என் மகளின் பேச்சை பலர் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. காரணம் அவளது பாலினம்.”, என தெரிவித்துள்ள ஜஸ்டின், அப்போதுதான் தன் மகளை நம்பிக்கை கொண்ட பெண்ணியவாதியாக வளர்த்தெடுக்க முடிவெடுத்ததாக அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

“அவளால் என்ன ஆக வேண்டும் என்று முடிவெடுக்கிறாளோ, அந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடியும் என நானும் என் மனைவியும் சேர்ந்து கற்று கொடுக்கிறோம்.”, என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஆணும் பெண்ணும் சமம் என நினைப்பதல்ல பெண்ணியம். எல்லோரும் சமமாக இருக்கும்போது நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என்று உணரும் அறிவுதான் பெண்ணியம்”, என தெரிவித்திருக்கிறார்.

ஆண் பிள்ளைகளை பெண்ணியவாதிகளாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஜஸ்டின் ட்ரூடோ, “பெண்ணியத்தின் வழக்கமான கலாச்சாரத்தை மாற்ற அதிகாரமும் கடமையும் நம் மகன்களிடம் உள்ளன”, என தெரிவிக்கிறார்.

“நம் பிள்ளைகளை பெண்ணியவாதிகளாக வளர்ப்பதன் மூலம் இந்த உலகத்தை கட்டமைப்பதில் அவர்களும் பங்கு வகிக்கின்றனர். அவர்களை பெண்ணியவாதிகளாக வளர்ப்பது எதிர்காலத்தில் அவர்களுக்கான கௌரவம். ஏனென்றால், இந்த உலகத்தை சிறப்பானதாக மாற்ற வேண்டிய கடமையும், வலிமையும் அவர்களிடத்தில் உள்ளது”, என தெரிவித்துள்ளார்.

பெண்ணியம் குறித்து தற்காலத்திய தேவையை உணர்த்தி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு உலகளவில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Justin Trudeau
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment