தேசிய உணவான கிச்சடி: “பிடிக்கலன்னு சொன்னா ஆன்டி இந்தியன்னு சொல்லுவாங்களோ?”

அதை முன்னிட்டு, டெல்லியில் நான்காம் தேதி 800 கிலோ எடைகொண்ட கிச்சடி இந்தியாவின் புகழ்பெற்ற உணவு கலை நிபுணர்களால் சமைக்கப்பட உள்ளது.

அதை முன்னிட்டு, டெல்லியில் நான்காம் தேதி 800 கிலோ எடைகொண்ட கிச்சடி இந்தியாவின் புகழ்பெற்ற உணவு கலை நிபுணர்களால் சமைக்கப்பட உள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
khichdi, national food,minister Harsimrat Kaur Badal, chef sanjeev kapoor

இந்தியாவின் தேசிய உணவாக ‘கிச்சடி’யை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisment

நவம்பர் 3-ஆம் தேதி முதல் டெல்லியில் இந்திய உணவு கருத்தரங்கு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, நான்காம் தேதி 800 கிலோ எடைகொண்ட கிச்சடி இந்தியாவின் புகழ்பெற்ற உணவு கலை நிபுணர்களால் சமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் உலக புகழ்பெற்ற சஞ்சீவ் கபூர், நட்சத்திர தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கிச்சடி, இந்தியாவின் தேசிய உணவாக விளம்பரப்படுத்தப்படுவது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல், “கிச்சடி உணவு ஆரோக்கியமானது, சுவையானது, பொருளாதார ரீதியில் விலை குறைவானது, செய்வதற்கு எளிமையானது”, என கூறினார்.

இந்தியாவில் பல உணவு வகைகள் இருக்கையில், கிச்சடி ஏன் தேசிய உணவாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது அதிசயமாக உள்ளது.

Advertisment
Advertisements

இந்த செய்தி வெளியானதிலிருந்து, ட்விட்டரில் பல கிச்சடி குறித்து ஜோக்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அதில், சிலவற்றை காணுங்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: