Advertisment

இரண்டாகப் பிளந்த ஜப்பானின் ‘கில்லிங் ஸ்டோன்’… பீதியில் மக்கள்

அந்த கல்லில், Tamamo-no-Mae என்ற அழகான பெண்ணின் சடலத்தின் பாகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

author-image
WebDesk
New Update
இரண்டாகப் பிளந்த ஜப்பானின் ‘கில்லிங் ஸ்டோன்’… பீதியில் மக்கள்

ஜப்பானில் மிகவும் பிரபலமான 'Sessho-seki' எனப்படும் கில்லிங் ஸ்டோன் இரண்டாக உடைந்தது, மூடநம்பிக்கை கொண்டவர்களிடம் தீய சக்தி வெளிவந்துவிட்டதாக அச்சத்தில் உள்ளனர்.

Advertisment

புராணத்தின் அடிப்படையில், 'Sessho-seki' என்கிற அந்த கல்லில், Tamamo-no-Mae என்ற அழகான பெண்ணின் சடலத்தின் பாகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. , ஒன்பது வால் கொண்ட நரியான அந்த பெண், 1107-1123 வரை ஆட்சி செய்த பேரரசர் டோபாவை கொல்லும் சதி திட்டத்தில் ஒருபகுதியாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது.

டோக்கியோவிற்கு அருகிலுள்ள டோச்சிகி மாகாணத்தில் உள்ள இந்த எரிமலைக் கல்லில் அவரது ஆவியை கட்டிவைத்ததாக சொல்லப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு புத்த துறவி ஒருவர் அந்த கல்லை சிதறடித்து பேய் ஓட்டியதாகவும், கல்லை அழித்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இன்று வரை ஜப்பான் மக்கள் அந்த ஆவி, நாசு மலையை சுற்றி வருவதாக நம்புகின்றனர். கல்லுடன் தொடர்பு கொண்ட யாருக்கும் இது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மூடநம்பிக்கையாளர்கள் சொல்கின்றனர்.

பிளவுபட்ட கல்லைக் கண்ட பார்வையாளர்கள் தங்களது அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒருவர், ஒன்பது வால் நரியின் புராணக்கதையில் சொல்லப்படும் 'Sessho-seki' பகுதிக்கு வந்தேன். அந்த பெரிய கல் ஒரு கயிற்றால் சுற்றப்பட்டு இருக்க வேண்டும், ஆனால் கல் இரண்டாகப் பிளந்து கயிறும் துண்டிக்கப்பட்டது. பார்க்கக்கூடாத ஒன்றை நான் பார்த்தது போல் உணர்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி டெய்லி மெயில் வெளியிட்ட அறிக்கையில், அந்த கல் விரிசலில் மழைநீர் புகுந்து பிளவு ஏற்பட்டிருக்கலாம். அதில், விரிசல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இருக்கிறது என தெரிவித்துள்ளது.

அந்த கல்லை என்ன செய்வது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள். ஒரு அதிகாரி, அந்த கல்லை மீண்டும் பழைய நிலையில் வைக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார்.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment