பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தைக் கொண்டாட காதலர்களும் காதலைச் சொல்ல இருப்பவர்களும் திட்டமிட்டுத் தயாராகி வருகிறார்கள். லவ் செட் ஆகாமல் சிங்கிளாக இருப்பவர்கள் மீம்ஸ்களைப் போட்டு லவ்வர்ஸ் டே, ப்ரொபஸ் டே, ஹக்ஸ் டே, சாக்லேட் டே என்ன எல்லாவற்றையும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் லவ்வர்ஸ் டே மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

காதலர் தின மீம்ஸ்கள் பார்பவர்களை எல்லாம் சிரிக்க வைத்து மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. அந்த வகையில் ஒரு மீம்ஸ் 90 கிட் ஒருவர் ஸ்வீட் உடன் லவ் ப்ரொபஸ் செய்கிறார். அந்த பெண் அதிர்ந்து போய் யார்ரா நீ தேன் மிட்டாய் கொடுத்து ப்ரொபஸ் பண்ற என்று கேட்கிற மீம்ஸ் சிரிப்பை நிறுத்த முடியாத அளவுக்கு சிரிக்க வைக்கிறது.

அதே போல, முரட்டு சிங்கிளாக இருக்கும் ஒருவர் சூரிய வாய்ஸில், “ரோஸ் டே, ஹக் டே, லவ்வர்ஸ் டே இதெல்லாம் பார்த்தால்ஏ இரிடேட்டிங் ஆகுது மாப்ள” என்று என்று கூறும் மீம்ஸ் முரட்டு சிங்கிள்களின் புகைச்சலைக் காட்டுகிறது.

அதே போல ப்ரொபசல் டே என்று ஒருத்தர்கூட எனக்கு ப்ரொபஸ் பண்ணவில்லை என்று கதறுபவர்களுக்கும் ஒரு மீம்ஸ் போட்டிருக்கிறார்கள்.
இப்படி காதலர் தினத்தை முன்னிட்டு, சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ள மீம்ஸ்களைஉங்களுக்காக இங்கே தொகுத்து தருகிறார். பார்த்து ஜாலியாக சிரித்து மகிழுங்கள்.








“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“