Advertisment

புனே: காலணியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்... எஃப்.ஐ.ஆர் போட்டு போலீஸ் விசாரணை!

காலணிகளை காணவில்லை என்ற புகாரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் மகாராஷ்ர மாநில போலீஸார்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Man loses chappal, cops launch probe, police complaint,Maharashtra

புனேவில் காலணிகளை காணவில்லை என்ற புகாரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மகாராஷ்ர மாநில போலீஸார். கொள்ளை, திருட்டு போன்ற பெரும்பாலான புகார்களை போலீஸார் ஏற்க தயங்குவார்கள் என்பதனை கேட்டிருப்போம். ஆனால், எந்த புகாரையும் நாங்கள் ஏற்று விசாரணை மேற்கொள்வோம் என்பதனை நிரூபித்துள்ளனர் இந்த மகாராஷ்டிர போலீஸார்.

புனேவில் உள்ள கேத் பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் வசித்து வருபவர் விஷால் கலேகர். கடந்த 3-ம் தேதி கேத் காவல் நிலையத்திற்கு செற்ற விஷால் கலேகர், தனது அப்பார்ட்மென்டில் இருந்த  புது காலணியை காணவில்லை என புகார் அளித்திருக்கிறார். அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் தனது காலணியை திருடிச் சென்றதாக புகாரில் தெரிவித்திருக்கிறார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காத் காவல் நிலைய போலீஸார், ஐ.பி.சி 379 விதியின்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது: காலணியை காணவில்லை என விஷால் கலேகர் கொடுத்த புகாரின் மீது, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அடையாளம் தெரியவாத நபர் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த அக்டோபர் 3-ம் தேதி, அதிகாலை 3-மணியில் இருந்து 8 மணிக்குள்ளாக இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அவரது காலணியின் மதிப்பு ரூ.425 என்று தெரிவித்திருக்கிறார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment