Advertisment

அடுத்த குழந்தையை வரவேற்கும் சூக்கர்பெர்க்: 2 மாத கால விடுமுறையை ஃபேஸ்புக்கில் அறிவித்து மகிழ்ச்சி

ஃபேஸ்புக்கின் தலைமை செயல் அலுவலர் மார்க் சூக்கர்பெர்க், தனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதை முன்னிட்டு 2 மாத விடுமுறையை ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
அடுத்த குழந்தையை வரவேற்கும் சூக்கர்பெர்க்: 2 மாத கால விடுமுறையை ஃபேஸ்புக்கில் அறிவித்து மகிழ்ச்சி

ஃபேஸ்புக்கின் தலைமை செயல் அலுவலர் மார்க் சூக்கர்பெர்க், தனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதை முன்னிட்டு இரண்டு மாதங்கள் விடுமுறை காலத்தை ஃபேஸ்புக்கில் அறிவித்தார். குழந்தை பிறப்பின்போது, மனைவிக்கு துணையாகவும், பிறக்கப்போகும் குழந்தைக்கு துணையாகவும் ஒரு ஆணின் பக்கபலம் எவ்வளவு தேவை என்பதை உணர்த்தும் வகையில் அவருடைய ஃபேஸ்புக் பதிவு அமைந்துள்ளது.

Advertisment

பல முக்கிய பிரச்சனைகள் குறித்து மார்க் சூக்கர்பெர்க் பல முறை சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் சார்லட்ஸ்வில்லில் இனவாதத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்ற கலவரம், ஆறு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுக்கு போக்குவரத்து தடையை அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் அறிவித்தது, ஆகியவற்றுக்கு எதிராக மார்க் சூக்கர்பெர்க் குரல் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் சோமாலிய அகதிகளுடன் ஒன்றாக அமர்ந்து மார்க் சூக்கர்பெர்க் இஃப்தார் விருந்து உட்கொண்டது இணையத்தில் பெரும் ஆதரவு பெருகியது.

தற்போது, மார்க் சூக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கர்ப்பமாக உள்ளார். அவர்கள் தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால், மார்க் சூக்கர்பெர்க் தற்போது இரு மாதங்கள் விடுமுறை எடுத்து தன் மனைவியின் அருகாமையில் இருக்க விரும்புவதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். தன் மனைவியுடன் தற்செயலாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இதனை அவர் அறிவித்தார்.

அதில், “என் முதம் குழந்தை மேக்ஸ் பிறந்தபோது நான் இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்தேன். அவள் பிறந்து ஒரு மாத காலம் நான் அவளுடன் கழித்த நாட்கள் சிறப்பானவை. என்னுடைய புதிய மகள் விரைவில் வரவிருக்கிறாள். அதனால், நான் மீண்டும் 2 மாதங்கள் விடுமுறை எடுக்கிறேன்.”, என எழுதியிருக்கிறார். அவருடைய மகளுக்கு தற்போது ஒன்றரை வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தன் முதல் குழந்தைக்கு விடுமுறை எடுத்ததன் மூலம், குழந்தை பிறப்பின்போது தந்தையின் துணையும், பக்கபலமும் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தினார். “ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு குழந்தை பிறப்பின்போது பெண்களுக்கும் 4 மாத கால விடுமுறை அளிக்கிறோம். அதேபோல், ஆண்களுக்கும் நான்கு மாத கால விடுமுறை அளிக்கிறோம். ஏனென்றால், பணிபுரிபவர்களுக்கு குழந்தை பிறக்கும்போது அவர்கள் விடுமுறை எடுத்து குழந்தையுடன் நேரம் செலவழித்தால், அந்த குடும்பத்திற்கே அது நன்மை பயக்கும்.”, என குறிப்பிட்டார்.

Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment