குண்டும் குழியுமான சாலைகள் பல சமயங்களில் வாகன ஓட்டிகளின் உயிரையே எடுத்துவிடும் அளவுக்கு ஆபத்தானவை. ஆனால், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் இதனை சாதாரண பிரச்சனையாக நினைத்துக்கொண்டு கடந்துவிடுவார்கள். மக்களும் குண்டும் குழியுமான சாலையை கடக்கும்போது மட்டும் அதிகாரிகளை மனதுக்குள் திட்டிக்கொண்டு அதன்பின் மறந்துவிடுவார்கள்.
பெங்களூரில் சாலையில் குழிகள் காணப்படுவது வழக்கமானது. ஆனால், தனக்கு தெரிந்த கலையை மக்களுக்கானதாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்த கலைஞர் ஒருவர், சாலை குழிகளை சரிசெய்ய வேண்டும் என அதிகாரிகளே திரும்பிபார்க்கும் வகையில் அசத்தலான வேலையை செய்திருக்கிறார்.
பாடல் நஞ்சுண்டசாமி என்ற கலைஞர், பெங்களூரு காமராஜ் சாலை - கப்பன் சாலை சந்திப்பில் உள்ள குழியில் ஒரு கடல் கன்னியையே உருவாக்கியிருக்கிறார். அந்த கடல் கன்னி வேறு யாருமல்ல கன்னட நடிகை சோனு கௌடா. சாலை குழியை கடல்போல் வடிவமைத்து, அதில் சோனு கௌடாவை பச்சை நிறை உடையுடன் கடல் கன்னிபோல் இறக்கியிருக்கிறார். இது பொதுமக்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை குழியை சரிசெய்திருக்கின்றனர். நஞ்சுண்டசாமி மற்றும் சோனு கௌடாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Before! #kamarajroad #potholes #nammabengaluru pic.twitter.com/MrgLTHuXTs
— baadal nanjundaswamy (@baadalvirus) 13 October 2017
After! #kamarajroad #potholes #nammabengaluru pic.twitter.com/e1m7QRlDJz
— baadal nanjundaswamy (@baadalvirus) 13 October 2017
A post shared by Sonu Gowda (@sonugowda) on
Thankew ???? #bbmp #media #potholes #nammabengaluru #streetart pic.twitter.com/st6S9MD26S
— baadal nanjundaswamy (@baadalvirus) 14 October 2017
நஞ்சுண்டசாமி தனக்கு தெரிந்த கலையை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இவரது கைவண்ணத்தால் சாலை குழிகளிலிருந்து முதலை, மயில், வாக்கு இயந்திரம் எல்லாமே தோன்றியிருக்கின்றன.
???? pic.twitter.com/bNTEOAXkI0
— baadal nanjundaswamy (@baadalvirus) 5 June 2017
???? pic.twitter.com/bNTEOAXkI0
— baadal nanjundaswamy (@baadalvirus) 5 June 2017
@kukkarahally #mysuru #mcc pic.twitter.com/PhWeSTNg7i
— baadal nanjundaswamy (@baadalvirus) 16 March 2017
@Cauverybhawan K G Road, Bangalore @shruthabharana pic.twitter.com/x6nOi9mSEq
— baadal nanjundaswamy (@baadalvirus) 11 March 2017
மக்களின் நலனுக்காக உங்கள் திறமையை பயன்படுத்துவதற்கு வாழ்த்துகள் நஞ்சுண்டசாமி மற்றும் சோனு கௌடா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.