அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா இருவரும் தங்களுடைய 25-வது ஆண்டு திருமண நாளை செவ்வாய் கிழமை கொண்டாடினர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா குறித்த காதல் கதைகள் எப்போதுமே வைரல் தான். ஒபாமா அதிபராக இருந்தபோதும், இப்போதும் தன் மனைவி மிச்செல் குறித்தான முக்கிய விஷயங்களையும், தருணங்களையும் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இருவரும் தங்களது 25-வது ஆண்டு திருமண நாளை சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் அழகான முறையில் வாழ்த்து கூறினர். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தன் இஸ்டகிராம் அக்கவுண்டில் வாழ்த்து தெரிவித்த மிச்செல் ஒபாமா, “இனிய 25-வது ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள். நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் தான் சிறந்த என் சிறந்த நண்பர். நான் அறிந்தவர்களில் அசாத்தியமான மனிதரும் நீங்கள்தான்.” என தெரிவித்திருந்தார்.