/tamil-ie/media/media_files/uploads/2017/09/DJBMKplVYAAkrxP.jpg)
டீ ஷர்ட் அணிந்து தன் தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ட்விட்டரில் பகிர்ந்ததற்காக, பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அண்மையில் நடைபெற்ற உலக மகளிர் கிரிக்கெட் போட்டியிலும், நிதானமான அணுகுமுறை, கேப்டன்ஷிப், பேட்டிங் ஆகியவற்றால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றார்.
மிதாலி ராஜ், கடந்த 6-ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் டீ-ஷர்ட் அணிந்துகொண்டு தன் தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இந்த புகைப்படத்தை பகிர்ந்ததற்கு மிதாலி ராஜை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படத்தை நீக்குமாறும் அவர்கள் கூறி வருகின்றனர். ”நீங்கள் ஆபாச நடிகையா?” எனவும், ”உங்களுக்கு மரியாதை என்பதே இல்லையா?”, எனவும் பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்ததற்காக, கேப்டன் மிதாலி ராஜை விமர்சித்து வருகின்றனர்.
#tb#PostShootSelfie#funtimes#girlstakeoverpic.twitter.com/p5LSXLYwmA
— Mithali Raj (@M_Raj03) 6 September 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.