சொல்லவே வேண்டாம்… தோனியை விட இப்பொழுதெல்லாம் அதிகம் வைரல் ஆவது அவரது மகள் ஜிவா தோனி தான். சமீபத்தில் தனது தந்தையுடன் லட்டுக்கு சண்டை போட்டதாகட்டும், நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டம் ஒன்றில் விளையாடி களைப்பில் இருந்த தந்தைக்கு தன் கைகளால் தாகம் தனித்ததாகட்டும், விராட் கோலியுடன் விளையாடியதாகட்டும்.. ஜிவாவின் அனைத்து வீடியோக்களும் செம வைரல்.
ஆனால், இப்போது வெளியாகி இருக்கும் ஜிவாவின் வீடியோ, அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘அத்வைதம்’ எனும் படத்தில் வரும் பக்தி பாடல் ஒன்றை பாடி ஆச்சர்யப்பட வைத்துள்ளார் ஜிவா.
கிருஷ்ண பரமாத்மாவின் புகழ் பாடும் இப்பாடலின் வரிகளை மழலை குரலில் சரியாக பாடி அசத்தியிருக்கிறார். ஜிவா தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வெறும் 15 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர்.