வீடியோ : சக்கரத்தின் கீழ் மாட்டிய தலை... ஹெல்மெட் இருந்ததால் உயிர் பிழைத்த அதிசயம்

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிந்து செல்வது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த வைரல் வீடியோ மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போடுவது எவ்வளவு அவசியமாக ஒன்றோ அதே போல் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது மிகவும் அவசிமானது தான். தலைகவசம் மற்றும் கார் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்தும், பலரும் அதனை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

ஹெல்மெட் இருந்ததால் உயிர் பிழைத்த இளைஞர்

எனவே இதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்த, போலீசார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரபலங்கள் மூலமாகவும் வைரல் வீடியோ புகைப்படங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நாக்பூர் போலீசார் ஒரு வைரல் வீடியோவை பகிர்ந்து விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். ஹெல்மெட்டை அணிந்து செல்லும் இளைஞர் ஒருவர் கனரக வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிக் கொள்ள, ஹெல்மெட் இருந்ததால் அவரின் தலை தப்புகிறது.

இதனால் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார். இந்த வீடியோவை நாக்பூர் போலீஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. ‘ஹெல்மெட்டால் தான் இந்த இளைஞர் உயிர் பிழைத்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோவை டிசிபி ராஜ் திலக் ரவுஷன் பகிர்ந்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close