“எனக்கு காதலன் இல்லை, காதலிதான் இருக்கிறாள்”: அழகிப்போட்டியில் பாலியல் விருப்பத்தை மறைக்காத அழகி

"காதலர் இல்லை, காதலிதான் இருக்கிறார்", என, ஒளிவு மறைவில்லாமல் தைரியமாக வெளிப்படுத்தியதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

By: Updated: November 9, 2017, 09:54:55 AM

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற அழகிப்போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவர், தனக்கு “காதலர் இல்லை, காதலிதான் இருக்கிறார்”, என, ஒளிவு மறைவில்லாமல் தைரியமாக வெளிப்படுத்தியதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பிலிப்பைன்ஸில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வை கடந்த 2008-ம் ஆண்டு, சிறந்த புவி அழகி பட்டத்தை வென்ற கர்லா ஹென்றி தொகுத்து வழங்கினார். இறுதிச்சுற்றின்போது, போட்டியாளர்கள் 12 பேரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது, போட்டியாளர்களிடம் கர்லா ஹென்றி தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உறவுகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு, போட்டியாளர்களில் ஒருவரான பிலிப்பைன்ஸின் செபு நகரத்தை சேர்ந்த மரியா இசபெல் (17 வயது), “எனக்கு காதலர் இல்லை, காதலிதான் இருக்கிறாள். ஏனென்றால், காதல் பாலினம் பார்ப்பதில்லை என்பதை நான் நம்புகிறேன். நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றால், அதை தொடருங்கள்”, என ஒளிவு மறைவில்லாமல் தைரியமாக தன் பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், அவர் தன் காதலி குறித்தும் சில வார்த்தைகளை பேசினார். “அவளை நான் காதலியாக பெற்றதற்கு பெருமை கொள்கிறேன். பாலினத்தை பொருட்படுத்தாமல் ஒருவரை காதலிப்பது தவறல்ல என்பதை சொல்லிக்கொள்கிறேன். அவள் காதலிப்பதற்கு ஏற்றவள். அவளுக்கு அழகான மனம் உள்ளது”, என கூறினார்.

இந்த போட்டியில் மரியா இசபெல் வெற்றிபெறவில்லை. இருப்பினும், தன் காதலி குறித்து முகநூல் பக்கத்திலும் பகிர்ந்தார்.

அதில், “என்னுடைய பாலியல் விருப்பத்தை யாரிடமாவது வெளிப்படுத்த நான் தயங்கியதில்லை. நான் நேர்மையாக இருப்பதையே விரும்புகிறேன். நான் உண்மை இல்லாத விஷயங்களை மற்றவர்களிடம் கூறுவதில்லை”, என தெரிவித்துள்ளார்.

அழகி போட்டியில் தன்னுடைய பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்தியதற்கு பலரும் மரியாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Not a boyfriend a girlfriend this beauty contestants honest reply has left netizens cheering

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X