scorecardresearch

மான்செஸ்டர் மராத்தானில் சேலை அணிந்து 42 கி.மீ ஓடிய ஒடியா வம்சாவளிப் பெண்!

மான்செஸ்டர் மராத்தானில் 41 வயதான மதுஸ்மிதா ஜெனா 4 மணி நேரம் 50 நிமிடங்களில் 42 கி.மீ ஓடி முடித்திருக்கிறார்.

Marathon in a saree, manchester marathon 2023 best pictures, மான்செஸ்டர் மராத்தான் 2023, மான்செஸ்டர் மராத்தானில் சேலை அணிந்து 42 கி.மீ ஓடிய ஒடியா வம்சாவளிப் பெண், odia woman completes marathon in a saree, indian express

இந்தியப் பெண்களின் பாரம்பரிய ஆடையான சேலை அழகாக இருக்கலாம். ஆனால், சேலையை விளையாட்டு விளையாடுவதற்கு அல்லது மராத்தான் ஓடுவதற்கு ஏற்ற உடையாக கருதமாட்டார்கள். ஏனெனில், அது ஒருவரின் அசைவுகளை கட்டுப்படுத்தும். 41 வயதான இங்கிலாந்து பெண் ஒருவர், சேலை அணிந்து மராத்தான் ஓட்டத்தை முடித்த பிறகு, சேலை பற்றிய இந்த தவறான எண்ணத்தை உடைத்திருக்கிறார்.

மான்செஸ்டரில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியையான ஒடியா வம்சாவளியைச் சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா, 42.5 கிலோமீட்டர் நீளம் மான்செஸ்டர் மராத்தானை நான்கு மணி நேரம் 50 நிமிடங்களில் ஓடி முடித்தார். ஸ்போர்ட்ஸ் ஜெர்சி அணிந்திருந்த மக்கள் மத்தியில், ஜெனாவின் பாரம்பரியமான சம்பல்புரி கைத்தறி புடவை அவரை தனித்துக் காட்டியது.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிக்கும் ஒடியா வம்சாவளியைச் சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா, சம்பல்புரி புடவை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர் மராத்தான் 2023 போட்டியில் ஓடி கவனத்தைப் பெற்றிருக்கிறார்.

மதுஸ்மிதா ஜெனாவின் மராத்தான் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்தகைய ஒரு படத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்த ஒரு ட்விட்டர் பயனர், “நல்லது, பட்டா புடவை அணிந்தவர்கள் அமெரிக்க திறந்தவெளியில் விளையாடுவதையும், தாசர் பட்டுப் புடவை அணிந்து சில நாள் டிரையத்லான் போட்டியில் விளையாடுவதையும் பார்க்க முடிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசும்போது, ​​தனது மராத்தான் அனுபவம் குறித்து மதுஸ்மிதா ஜெனா கூறுகையில், “சேலை அணிந்து மராத்தான் ஓடிய ஒரே நபர் நான்தான். இவ்வளவு நீண்ட நேரம் ஓடுவது ஒரு தொடர் வேலை, ஆனால், சேலையில் அவ்வாறு செய்வது இன்னும் கடினமானது. ஆனால், முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

தனது பாட்டி மற்றும் தாயார் எப்போதும் சேலை அணிந்திருந்ததால் அவர்களைப் பார்த்து தனது ஆடையைத் தேர்ந்தெடுத்ததாக ஜெனா கூறினார். “பெண்கள் சேலை அணிந்து ஓட முடியாது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், சம்பல்புரி கைத்தறி சேலை அணிந்து ஓடியதன் மூலம் நான் அவர்களின் முடிவு தவறானது என நிரூபித்திருக்கிறேன். எப்படியானாலும், இங்கிலாந்தில் கோடைக்காலத்தில் நான் சேலை அணிவேன்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Odia descent woman completes 42 km manchester marathon in a sari

Best of Express