திடீரென்று பற்றி எரிந்த கார்.. நடிகர் விஜய்யின் டிசைனருக்கு நேர்ந்த சோகம்!

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பல்லவி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

நடிகர் விஜய்யின் காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங் மிகப் பெரிய ஆபத்தில் இருந்து உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விஜய்யின் டிசைனர் பல்லவி சிங்:

பல்லவி சிங் என்பவர் இந்தி மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ஸ்டைசிலாக உள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யின் ஸ்டைலிஸ்டாக, திரைப்படங்கள் மட்டுமில்லாது  விஜய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் அவருக்கான ஸ்டைலிஸ்டாக பல்லவி சிங் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிக்கு உபேர் கால் டாக்சியில் பல்லவி சிங் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். கார் ஆழ்வார் பேட்டை பாலத்தில் வந்த போது திடீரென பிளாஸ்டிக் எரியும் நாற்றம் பல்லவி சிங்கிற்கு வந்துள்ளது.

அது குறித்து டேக்சி ஓட்டுனரிடம் கூறிய போது அவர் அதனை பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் பல்லவி சிங் அமர்ந்திருந்த சீட்டிற்கு அடியில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்து பல்லவி அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் கார் தீப்பிடித்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் அலறி அடித்தபடி காரை நிப்பாட்டிய ஓட்டுனர், பல்லவி சிங்கையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் காரின் அனைத்து பாகங்களும் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் பல்லவி சிங் கொண்டு வந்திருந்த லக்கேஜ், உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளார்.

அது ஒரு புறம் இருக்க தான் நூலிழையில் உயிர் பிழைத்திருப்பதாகவும், தனக்கு என்ன நேர்ந்தது என்ன என்பதையும் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பல்லவி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

பல்லவியின் இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் அந்த வழியாக தான் விஜய்யின் 63வது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் சென்றுள்ளார். ஆனால் அது பல்லவி என தெரியாமல் சென்றுவிட்டதாக அவர் பதில் பதிவும் வெளியிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close