Advertisment

வேப்ப மரத்தில் விளையாடும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் அப்பா டக்கர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வேப்ப மரத்தில் விளையாடும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால்; கண்டுபிடிச்சா நீங்கதான் அப்பா டக்கர்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் விலங்கு, ஆப்டிகல் இல்யூஷன் வைரல், ஆப்டிகல் இல்யூஷன் சவால், வைரல் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் சவால்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சாவல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷனுக்கும் கண்ணாமூச்சிக்கும் ஒரே வித்தியாசம், கண்ணாமூச்சியில் உங்கள் கண்கள் கட்டப்பட்டிருக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் உங்கள் கண்கள் திறந்தே இருக்கும். இரண்டிலும் கண்டுபிடிப்பது கடினம்.

Advertisment
publive-image

வேப்ப மரத்தில் விளையாடும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் அப்பா டக்கர்!

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வேப்ப மரத்தில் விளையாடும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் அப்பா டக்கர். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், நீங்கள் அப்பா டக்கர்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பு, தவறவிடாதீர்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணத்தை வைத்து ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அமைக்கப்படுகின்றன. மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு உங்கள் கவனத்தை வேறு ஒரு இடத்தில் ஈர்க்கும் வகையில் இருக்கும்.

இதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரம் என்கிறோம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டாக, டிஜிட்டல் யுகத்தின் கண்ணாமூச்சி விளையாட்டாக அனுபவமாகும்.

publive-image

வேப்ப மரத்தில் விளையாடும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் அப்பா டக்கர்!

இந்த படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. வீட்டின் முன்பு சுற்றுச் சுவர் ஓரத்தில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தில் விளையாடும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் ‘அப்பா டக்கர்’ நீங்கள்தான். ஏனென்றால், இந்த படத்தில் பாம்பை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அதனால், பாம்பை கண்டுபிடிங்க நீங்கள் ‘அப்பா டக்கர்’ என்பதைக் காட்டுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் வேப்ப மரத்தில் விளையாடும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் ‘அப்பா டக்கர்’ நீங்கள்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

வேப்ப மரத்தில் விளையாடும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் அப்பா டக்கர்!

சரி அப்பா டக்கர் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? உண்மைலேயே அப்பா டக்கர் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அப்பா டக்கர் வார்த்தை எப்படி உருவானது என்று தெரிந்துகொள்வோம்.

அமிர்தலால் விதல்தாஸ் தக்கர் (Amritlal Vithaldas Thakkar) ஒரு காந்தியவாதி, குஜராத்தில் பிறந்த இவர் ஹரிஜன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தியவர்.

சுதந்திரத்திற்கு முன்னால் மெட்ராஸ் மாகாணத்திலும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இவரை மெட்ராஸ் மக்கள் பாசமாக தக்கர் பாபா என்று அழைத்தனர். குஜராத்தியில் பாபா என்றால் அப்பா என்று பொருள்.

தக்கர் பாபா பெரிய அறிவாளி, பல துறைகளில் சிறந்து விளங்கியவர். அவரிடம் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்வார். அதுமட்டுமல்ல, அவர் காந்தியின் ஆசிரமத்தில் இருந்தபோது, காந்தியிடம் அறிவியல் தொடர்பாக கேட்கப்பட்டு வரும் கடிதங்களுக்கு இவர்தான் பதில் அளிப்பார்.

மெட்ராஸ் மக்கள் யாரையாவது நீ பெரிய அறிவாளியா என்று கேலியாக குறிப்பிட பெரிய அப்பா தக்கரா ? என்று கேட்க தொடங்கினர்.

பின்னாளில் அப்பா தக்கர் என்ற வார்த்தை மருவி அப்பா டக்கர் ஆகிவிட்டது. இப்படித்தான் அப்பா டக்கர் என்ற வார்த்தை உருவானது.

தக்கர் பாபா பெயரில் தக்கர் பாபா வித்யாலயா என்றொரு பள்ளியில் தியாகராய நகரில் வெங்கட்நாராயணா சாலையில் இன்றும் செயல்படுகிறது.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மேல் பகுதியில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது படத்தில் வேப்ப மரத்தில் விளையாடும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

பாம்பை கண்டுபிடித்த நீங்கதான் அப்பா டக்கர்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment