scorecardresearch

ஒரு ரொமாண்டிக் சவால்… பூக்களுக்கு இடையே மறைந்திருக்கும் சின்ன இதயத்தைக் கண்டுபிடிங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்ணை ஏமாற்றி மூளையைக் குழப்பும் வகையில் ஒரு ரொமாண்டிக் சவாலை விடுக்கிறது. பூக்களுக்கு இடையே ஒரு சின்ன இதயம் மறைந்திருக்கிறது. அதை 20 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால்.

Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் என்றால் அது மிகையல்ல. மேலோட்டமாகப் பார்த்தால், ஆப்டிகல் இல்யூஷன் புதிர் எளிதாக தெரியலாம். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல.

விலங்கைக் கண்டுபிடியுங்கள், பறவையைக் கண்டுபிடியுங்கள் என்று எதையாவது கண்டுபிடிக்க முடியுமா என்று ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவாலைத் தீர்ப்பது என்பது உண்மையிலேயே மிகப்பெரிய சவால்தான். ஏனென்றால், அது வைகோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போன்றது. பப்பாளி விதைகளுக்கு மத்தியில் ஒரு மிளகைத் தேடுவதைப் போன்றது. கலப்படப் பொருட்களில் உண்மையான பொருளைத் தேடுவதைப் போன்றது. ஆதனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்ணை ஏமாற்றி மூளையைக் குழப்பும் வகையில் ஒரு ரொமாண்டிக் சவாலை விடுக்கிறது. பூக்களுக்கு இடையே ஒரு சின்ன இதயம் மறைந்திருக்கிறது. அதை 20 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு புகழ்பெற்ற ஜெர்ஜ்லி டுடால்ஃப்தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வரைந்துள்ளார். மிகவும் ரொமாண்டிக்காக உள்ள இந்த படத்தில், நிறைய பிங்க் நிற பூக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த படத்தில் பிங்க் நிற பூக்களுக்கு இடையே ஒரு சின்ன இதயத்தை வைத்திருக்கிறார் டுடால்ஃப். அதை ஒரு ரொமாண்டிக்கான நோக்குடன் 20 நொடிகளில் தேடி கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

பூக்களுக்கு இடையே மறைந்திருக்கும் சின்ன இதயத்தை 20 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்பு தருகிறோம்.

அந்த சின்ன இதயம் படத்தின் இடது பக்கத்தில் இருக்கிறது.

இன்னும் துல்லியமான ஒரு குறிப்பு என்றால், வெள்ளை பறவைகளுக்கு அருகே உள்ளது.

இப்போது படத்தை நன்றாகப் பார்த்து சின்ன இதயம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.
உங்களால், இன்னும் அந்த சின்ன இதயத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சின்ன இதயம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கான விடையை இங்கே தருகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the tiny heart among flowers this is romantic challenge