Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அதில் வாழ்க்கைத் தத்துவமும் இருக்கிறது அப்படி என்ன வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புதரில் மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சோதனை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் புதிரில் ஒரு வாழ்க்கைத் தத்துவம் இருக்கிறது என்று கூறினோம் இல்லையா? புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதிய இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்தும்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது”
என்ற இந்த தத்துவப் பாடல் வரிகள் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்துகிறது இல்லையா?
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள வெண்டைக்காய் செடிகள் இடையே ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என விரைவாகக் கண்டுபிடியுங்கள் நீங்கள் கில்லி என்பதைக் காட்டுங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் கூர்மையான பார்வைத் திறன் கொண்டவர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை முடிந்த வரை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.