ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் ஒரு புயல் போல வீசி வருகிறது. சுவாரசியமான புதிராக பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இந்த படத்தில் 3 வீரர்கள் இருக்கிறார்கள் இதில் யார் உயரமானவர் என்பதே உங்களுக்கான சவால். சரியான விடை கூறுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்ஷனாக மாறிவருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும். பிறகு, எது உண்மையான தோற்றம் என்ற குழப்பம் ஏற்படுத்தும். ஆனால், இறுதியில் உண்மையான தோற்றம் விடையாகத் தெரியும்போது குழப்பம் அடைந்தவர்கள் ஆச்சரியம் அடைவார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த 3 வீரர்களில் மிக உயரமானவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனைக்கு பலரும் விடையளிக்க முயற்சி செய்தனர். ஆனால், 10% பேர் மட்டுமே சரியான விடையளித்தனர். இந்த ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்டில் நீங்கள் சரியான பதில் அளித்து கூர்மையான பார்வை உடைய 10% பேர் வரிசையில் சேர்கிறீர்களா என்று பார்ப்போம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதில் இல்லாத ஒன்றை நம்பச் செய்யும். இல்லாத விஷயங்களைப் பார்க்க வைக்கும். ஆனால், விடை வேறு ஒன்றாக இருக்கும்.

முதலில் இருப்பவர் உயரம் குறைவாகவும் நடுவில் இருப்பவர் சற்று உயரம் அதிகமாகவும் மூன்றாவதாக இருப்பவர் உயரமாகவும் தெரிகிறார்கள். ஆனால், இதில் யார் மிக உயரமானவர் என்பதே கேள்வி. அனைவரும் மேலோட்டமாக பார்த்துவிட்டு 3வது இருப்பவர் உயரமானவர் என்று கூறினால் அது தவறு.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் மூளையை முதல் மனிதன் குள்ளமாக இருக்கிறார் என்றும், இரண்டாவது மனிதன் சற்று உயரமானவர் என்றும், மூன்றாவது மனிதன் மிக உயரமானவனர் என்றும் நினைக்க வைக்கிறது. ஆனால், எல்லா ஆண்களும் ஒரே உயரத்தில் உள்ளவர்கள் என்பதே சரியான விடை.
அதை எப்படி நிறுவுவது? பின்னணியை மட்டும் பாருங்கள். அங்கு ஓடும் கோடுகள் வலது பக்கமாகச் சுருங்கி ஒரு இல்யூஷன் விளைவைக் கொடுக்கும். இதுவே இந்தப் படத்தை ஆப்டிகல் இல்யூஷன் படமாக மாற்றியுள்ளது இப்போது உங்களுக்குத் தெரியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”