பானி பூரி என்பது சொல்லப்போனால் ஒரு தெருவோரக் கடை உணவு தான். ஆனால், தற்போதைய நிலையில், சிட்டில இருக்குற பெரும்பலான டிபார்ட்மென்ட் ஸ்டோர் வாசல்களிலும் இந்த பானி பூரி கடைகளை பார்க்கலாம். இப்படி பட்டித் தொட்டி எங்கும் இந்த பானி பூரிக்கு உணவுப் பிரியர்கள் ஏராளமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த உணவு நிறுவனம் ஒன்று, பானி பூரி உற்பத்திக்காக ரூ.100 கோடி முதலீடு செய்து, அதனை ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுதி செய்ய திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் ரூ.100 கோடி முதலீடு செய்து, பானி பூரி, அப்பளம், மற்றும் பாஸ்தா ஆகிவற்றின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அங்கித் ஹன்சாலியா கூறும்போது: தற்போதை நிலையில்,நாள் ஒன்றுக்கு 30 டன் வரையில உணவு வகைகளை உற்பத்தி செய்து வருகிறோம். இதனை இரட்டிப்பாக்கும் வகையில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் ரூ.100 கோடி முதலீடு செய்யவுள்ளோம். இந்த உணவு வகைகளானது ஷரியத் என்ற ப்ராண்ட் பெயரில் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம். இதுவரை வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இனி மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து விற்பனையை அதிகரிக்கவுள்ளோம். இதற்காக பல்வேறு வகையான பானி பூரி, பாஸ்தா வகைகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வருங்காலங்களில் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். தெருவோர கடைகளில் ரசித்து ருசித்து சாப்பிடும் இளைஞர்கள் போன்ற மக்களை கருத்தில் கொண்டே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதால், நிச்சயமாக அதுபோன்ற டேஸ்ட்டில் இந்த உணவு வகைகள் தரமான தரத்தில் இருக்கும் என்றார்.
தற்சமயத்தில், இந்த நிறுவனமானது உத்திரபிரசேதம், பீகார், டெல்லி, குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடாக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.