பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சியொன்றில் ஜோடி ஒன்று பாடல் ஒன்றுக்கு அழகாக நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
பிலால் இஜாஸ் என்பவரால் சிக்னேச்சர் என்று அழைக்கப்படும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட திருமண புகைப்படப் பக்கம் இந்த வீடியோவை வெளியிட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட கிளிப் 3.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இவர்கள், 2006 ஆம் ஆண்டு வெளியான ஓம்காரா திரைப்பட பாடலுக்கு கச்சிதமாக நடனம் ஆடுகின்றனர்.
குர்தா பைஜாமா அணிந்து, திருமணத்தில் கலந்துகொண்ட அவர் தனது மனைவியுடன் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில், ஆயிஷா என்ற பாகிஸ்தானிய பெண், ‘மேரா தில் யே புகாரே ஆஜா’ பாடலுக்கு அற்புதமான நடனத்தை காட்டினார். இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளை பெற்றது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/