சாலை விதிகளை தொடர்ந்து மீறும் வகையில் 4 பேருடன் பைக்கில் சென்ற நபரை பார்த்து ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைகூப்பி கும்பிடுபோடும் புகைபடம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபுர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தின்போது ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப குமார், பணிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், ஹனுமானதாராயுடு என்பவர் அரவது மனைவி மற்றும் மகன்கள் இருவருடன் ஓரு பைக்கில் செல்வதை கண்டிருக்கிறார். அப்போது தான், அவர்களை நோக்கி கும்பிடு போட்டிருக்கிறார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.
இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப குமார் கூறும்போது: சாலை பாதுகாப்பு குறித்த ஒன்றறை மணி நேர நிகழ்ச்சி அப்போது தான் முடித்துக் கொண்டு சென்றிருந்தேன். அந்த சமயத்தில், 4 பேர் ஒரே பைக்கில் செல்வதைக் கண்டேன். குறிப்பாக, அந்த பைக்கில் சென்றவர், சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பது தான். அவர்களை பார்க்கும்போது, ஆத்திரம் வந்தது மட்டுல்லாமல், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் தான் அவ்வாறு கைகூப்பி கும்பிடு போட நேரிட்டது. குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமால் இவ்வாறு பயணம் செய்யக் கூடாது என அவருக்கு அறிவுறுத்தினேன்.
அவரது குழந்தைகள் இருவர் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்தனர். அதோடு குழந்தைகளின் கால்கள், பைக்கின் ஹேன்டில்பாரில் இருந்ததையைம் கவனிக்க முடிந்தது. இது போன்ற சம்பவங்களினால் தான் விபத்து ஏற்படுகிறது என்று அவர்களிடம் கூறினேன். இதைக்கேட்ட அந்த நபர், என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டு, முனுமுனுத்துக் கொண்டார்.
பைக்கில் வந்த அந்த நபர், இதுபோன்று சாலை விதிகளை மதிக்காமல் வருவது முதல் முறையில்லை. அப்பகுதியில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகம் கிடையாது. எனவே, கடந்த 4 மாதங்களாக ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், அதிக பாரம் ஏற்றுதல், விபத்து எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்தும் வீடியோக்கள் என பல்வேறு முறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், விபத்தில் உறவினர்களை பறிகொடுத்தவர்களின் குடும்பத்தினரிடம் நேர்காணல் நடத்தி, அவர்களின் துன்பத்தையும் மக்களிடத்தில் காண்பித்து வருகிறோம். ஆனாலும், இவற்றையெல்லாம் பெரும்பலானோர் கண்டு கொண்டதாக தெரிவயில்லை. இதனால், சில சமயங்களில் எரிச்சலும், ஆத்திமும் மட்டுமே வருகிறது என்று கூறுகிறார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Photo of policeman pleading with repeat traffic offender goes viral