Advertisment

வீடியோ: பரிசாக வழங்கப்பட்ட நாய்க்குட்டியை அன்புடன் வருடிக்கொடுக்கும் புதின்

அப்போது, அவரை நேரில் சந்தித்த துர்க்மெனிஸ்தான் நாட்டின் அதிபர் குர்பங்குலி பெர்திமுகமதேவ், அவருக்குஅலபாய் வகை நாய்க்குட்டியை பரிசாக அளித்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
vladimir putin, russia,

இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டின் சிறப்புகளை வலியுறுத்தும் விதமாகவும், அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் பரிசுப்பொருட்களை வழங்குவது வழக்கம். தலைவர்களுக்கு பிடித்த பொருட்கள், அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை தெரிந்து வைத்துக்கொண்டும் சிலர் பரிசுகள் வழங்குவர்.

Advertisment

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன் 65-வது பிறந்தநாளை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி கொண்டாடினார். அப்போது, அவரை நேரில் சந்தித்த துர்க்மெனிஸ்தான் நாட்டின் அதிபர் குர்பங்குலி பெர்திமுகமதேவ், அவருக்குஅலபாய் வகை நாய்க்குட்டியை பரிசாக அளித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய பெட்டியில் கொண்டு வரப்பட்ட அந்த நாய்க்குட்டியை, துர்க்மெனிஸ்தான் அதிபர் அதன் கழுத்தை கடுமையாக பிடித்து புதினுக்கு பரிசாக அளித்தார். அதை, அன்புடன் வாங்கிக்கொண்ட புதின், அந்நாய்க்குட்டியின் கழுத்தை அன்புடன் வருடி கொடுத்தார். அதற்கு வெர்னி (நம்பிக்கை) என பெயர் வைத்தார் புதின். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதின் அந்நாய்க்குட்டியை மென்மையாக வருடியதை பலர் பாராட்டிவரும் அதே வேளையில், குர்பங்குலி அதன் கழுத்தை கடுமையாக பிடித்ததற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நாய்க்குட்டி தவிர, கைகளால் நெய்யப்பட்ட தரை விரிப்புகள், பந்தய குதிரைகள் ஆகியவற்றையும் குர்பங்குலி புதினுக்கு பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Russia Vladimir Putin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment