ராகுல்காந்தி அணிந்திருந்த சூட்-பூட்டின் விலை ரூ. 70,000 : பிஜேபியின் பகீர் குற்றச்சாட்டு!

பாஜக ட்விட்டர் பக்கத்தில், பெரும் ஊழல் செய்ததால் கிடைத்த கருப்பு பணத்தில் ராகுல் இந்த விலையுர்ந்த சூட்-பூட்டைஅணிந்துள்ளாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இசைக் கச்சேரில் ராகுல் காந்தி அணிந்திருந்த உடையின் விலை குறித்து பாரதி ஜனதாவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

வரும் 27 ஆம் தேதி மேகாலயாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இங்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரசாரத்தைத் தொடக்கினார். வித்யாசமான முறையில் பிரச்சாரத்தை துவக்க நினைத்த ராகுல், ஷில்லாங் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இசைக்கச்சேரி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இங்கு ஆளுங்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

அதன் முதல் படியாக இசைக்கச்சேரியுடன் காங்கிரஸ் பிரச்சாரத்தை துவக்கியது. இந்த கச்சேரில் தனது பிரச்சார உரையை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த ராகுல், குளிரைத் தாங்கக் கூடிய கருநீல ஜாக்கெட் ஆடையை அணிந்திருந்தார்.இந்த ஜாக்கெட்டில், ராகுல் காந்தி மிகவும் அழகாக தோன்றுவதாக, கூட்டத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் தெரிவித்திருந்தனர். அதனுடன் பிரச்சாரத்தில் ராகுல் தோன்றிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

இந்நிலையில், ராகுலின் இந்த ஆடையின் விலை குறித்து பாரதிய ஜனதாவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். ராகுல் அணிந்திருந்த ஆடை, லண்டனில் புகழ்பெற்ற பர்பெரி நிறுவனத்தின் தயாரிப்பு என்று, இதன் விலை சுமார் 70,000 ரூபாய் என்றும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் பாஜக ட்விட்டர் பக்கத்தில், பெரும் ஊழல் செய்ததால் கிடைத்த கருப்பு பணத்தில் ராகுல் இந்த விலையுர்ந்த சூட்-பூட்டைஅணிந்துள்ளாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல், தனது உடைக் குறித்த சர்ச்சைக்கு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

×Close
×Close