2.0 பாடல்களைவிட ஹிட்டானது இந்த புகைப்படம்தான்: பேரன்களுடன் கொஞ்சிப்பேசும் ரஜினி

லிங்கா, ஆரத்யா தன் தாத்தா ரஜினிகாந்துடன், இசை வெளியீட்டு விழாவில் பேசும் தருணம் அழகிய புகைப்படமாக இணையத்தில் ஹிட்டாகியுள்ளது.

actor rajinikanth, endhiran 2.0, endhiran 2.0 audio launch, director shankar

எந்திரன் 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. ரஜினிகாந்த் இயக்குநர் சங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோ இதில் கலந்துகொண்டனர். படத்தின் ‘எந்திர லோகத்து சுந்தரியே’, ‘ராஜாளி நீ காலி’ ஆகிய இரண்டு பாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆனால், அதே சமயம் எந்திரன் 2.0 ஆடியோ வெளியீட்டு விழாவிலிருந்து மற்றொரு விஷயமும் செம்ம ஹிட்டாகியுள்ளது. என்னன்னு யோசிக்கிறீங்களா? ரஜினிகாந்த் தன் பேரன்களுடன் பேசும் புகைப்படம்தான் அது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மகன்கள் லிங்கா, ஆரத்யா தன் தாத்தா ரஜினிகாந்துடன், இசை வெளியீட்டு விழாவில் பேசும் தருணம் அழகிய புகைப்படமாக இணையத்தில் ஹிட்டாகியுள்ளது. விழாவில், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இன்னொரு விஷயமும் தெரிஞ்சுக்கோங்க, இசை வெளியீட்டு விழாவுக்கென மொத்தம் ரூ.12 கோடி செலவிட்டுருக்கின்றனர் என்பது கூடுதல் செய்தி. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை துபாய் முழுதும் உள்ள மால்களில் நேரலை செய்யப்பட்டது. அதுமட்டுமா? திரைப்படத்தின் போஸ்டருடன் வீரர்கள் ஸ்கை டைவிங் செய்தும் அசத்தினர்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajinikanth had two special guests at 2 0 audio launch see adorable photo

Next Story
”இந்த 2 சமோசாவ வச்சிக்கிட்டு எங்கள மன்னிச்சிடுங்க”: அதிருப்தி வாடிக்கையாளரை சமாதானப்படுத்திய ஓலாola cab, samosa, cancellation fee
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express