ரஜினி வீட்டில் தொடங்கியது கொண்டாட்டம்.. டும் டும் -க்கு ரெடியானர் சவுந்தர்யா!

பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது

soundarya rajinikanth marriage : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் திருமண கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கியுள்ளது, அவரின் இரண்டாவது மகள் சவுந்தர்யா திருமணம் இன்னும் ஒருவாரத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமாவின் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு சவுந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். மேலும்,சவுந்தர்யா 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் என்பவரை மறுமணம் செய்யவுள்ளார்.

இவர்களின் திருமணம் வரும் 11ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது

இந்நிலையில் சௌதர்யா டிவிட்டர் பக்கத்தில் புடவை அணிந்துகொண்டு, திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலர் அவருக்கு வாழ்த்துக்களை சொன்ன வண்ணம் இருக்கின்றனர்.

இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை E3 காவல் நிலையத்திற்கு சென்று ஒரு மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் வரும் 10 தேதி அன்று எங்களது மகள் சௌந்தர்யா திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற உள்ளதால் இந்த கல்யாண விழாவில் விவிஐபிகளான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். ஆகையால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close