எல்லாவற்றையும் புகார் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் கேங்குக்கு ஒருவராவது நிச்சயம் இருப்பார்கள். அலுவலகத்தில் பாஸ், டிராஃபிக், அவர்களுடைய காதல் வாழ்க்கை, குடும்பம் என எல்லாவற்றையும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுடன் இருந்தால் நிச்சயம் நமக்கு எதிர்மறை எண்ணங்கள்தான் தோன்றும். வாழ்க்கையை அவர்கள் நேசிக்க மாட்டார்கள். எவ்வளவோ சமூக பிரச்சனைகள், கலவரங்கள், பயங்கரவாதம் இருந்தாலும், ஒரு சிறிய அன்பு எல்லோருக்காகவும் காத்துக் கொண்டுதான் இருக்கிறது. நம்மில் சிலர் அதனை கவனிக்க தவறிவிடுகிறோம்.
Advertisment
இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ரூடி ஃபிரான்சிஸ்கோ ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. அவருடைய கவிதையில் இப்படி ஒரு வரி வருகிறது.
”மனித இதயம் ஒரு மணி நேரத்திற்கு 4,000 முறை துடிக்கிறது. ஒவ்வொரு துடிப்பிலும், “நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள்.”, என்ற வரிகள் பொறிக்கப்பட்ட கோப்பை உள்ளது”, என ஒரு வரி உள்ளது.
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் குறை கூறுவதை தவிர்த்துவிட வேண்டும் என்பதையே இக்கவிதை மூலம் ரூடி உணர்த்தியிருக்கிறார். “உயிருக்கே ஆபத்தான நிகழ்வுகளையெல்லாம் பலர் தைரியத்துடன் வாழ்க்கையில் போராடுவதற்கான தூண்டுதலுடன் கடந்து வந்திருக்கின்றனர்.”, என்ற வரி ‘அது சரியில்ல, இது சரியில்ல”, என குறை சொல்லும் நோக்கத்துடனேயே இருப்பவர்களுக்கெல்லாம் பாடம்.
பிரச்சனைகள் வரும்போதெல்லாம் நம் கையில் விலைமதிப்பற்ற வாழ்க்கை இருக்கிறது என்று உணராமல் முடிவுகளை எடுக்கும் இளைஞர்களுக்கு இந்த கவிதை ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.